5. பெரும்பாலும் திசைச்சொற்களும் வடசொற்களும் உ-ம்: பிரளயம் குறிப்பு : தொழிற்பெயர் விகுதிகளில், உள் தவிர மற்றவற்றின் ஈற்றில் வரக்கூடியது லகர மெய்யே. உ-ம் : தல், அல், கல், சல் ளகர ழகரச் சொற்கள் அளம் = உப்பு | அழம் = பிணம் | அளகு = பெண்பறவை, கோழி | அழகு = அலங்காரம் | அளி = ஏ. தா. அருள், கா, குழை பெ. அருள், வண்டு, சேறு | அழி = கெடு | அளை = ஏ. கல. குழை. பெ. வளை | அழை = கூப்பிடு, பெயரிடு | ஆளம் = ஒரு விகுதி | ஆழம் = depth | ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி | ஆழி = கடல், மோதிரம், சக்கரம் | ஆள் = ஏ. பழங்கு, பயன்படுத்து, அரசு செய், | ஆழ் = to be deep, to immerse, to merge அதிகாரம் செலுத்து பெ. a person | இள = ஏ. மெலி, மென்மையாகு பெ.எ. மெல்லிய young | இழ = to lose | இளி = ஏ. தாழ் பெ. தாழ்வு, ஓர் சுரம் | இழி = தாழ், இறங்கு | இளை = ஏ.மெலி, களை, மூச்சுவாங்கு பெ.காவறகாடு | இழை = ஏ. தேய், செய், நூலிடு பெ. நகை. நூல். | உளவு = வேவு | உழவு=உழுதல்,பயிர்த்தொழில்,வருத்தம், முயற்சி | உளி = ஓர் ஆயுதம், | உழி = இடம், 7ஆம் வேற்றுமை உருபு | உளு = புழுவரி | உழு = to plough | உளை = ஏ. நோகு. பெ. சேறு | உழை = ஏ. வருந்தி வேலைசெய பெ. இடம், மான் | ஒளி = ஏ. மறை. பெ. வெளிச்சம், புகழ் | ஒழி = அழி, நீக்கு | களி = ஏ. மகிழ், கட்குடி பெ. மகிழ்ச்சி குடியன். | கழி = நீக்கு, to substract, நீராய் வெளிக்குப்போ பெ. கோல், கடற் கால்வாய் | களை = ஏ. இளை, வலியிழ, நீக்கு பெ. முகவழகு, வேற்றுப்பயிர்,அலகு (சங்கீதம்) | கழை = கோல், கரும்பு, மூங்கில் | காளி = ஒரு பெண் தெய்வம்,பேய்த் தலைவி | காழி = சீகாழி | சீகாளி = திருக்காளி | சீகாழி = ஓர் ஊர் | காள் = நாயொலி | காழ் = எ. முற்று.பெ.வைரம்,விதை,முத்து, முத்துமாலை, பகை. | |