பக்கம் எண் :

எழுத்தியல்9

உ-ம்: உருக்கு என்பது உருகு என்னுந் தன்வினையின் பிறவினை.
பொறாமை என்பது பொறு என்னும் வினையடியாய்ப் பிறந்த எதிர்மறைத் தொழிற்பெயர்.

     அவ்வாறு, எண்ணியவாறு என்னும் தொடர்மொழிகளின் ஈற்றில் உள்ளது ஆறு என்னும் பெயர். இங்ஙனமே பிறவும்.

      ஒருவகையானும் ரகர றகரம் அறியப்படாத சொற்களை ஆசிரியர்வாய்க் கேட்டுணர்க.

       செலவாய்ப்போய்விட்டது என்னும் பொருளில், அருவாய்ப் போய்விட்டது, அறவாய்ப் போய்விட்டது என இரு விதத்தும் எழுதலாம்.

ழகர ளகர பேதம் - த.எ

ளகரம் வருமிடங்கள்

1. இரட்டித்தல் : இரட்டிக்குமிடமெல்லாம் ளகரம். ழகரம் இரட்டிக்காது.

உ-ம் : வெள்ளை, தெள்ளிய

2. தனிக்குறில்மெய் : தனிக்குறிலையடுத்த மெய்யாய் வருவது ளகரம். ழகரமெய் தனிக்குறிலை யடுத்து வராது.

உ-ம் : எள், கொள், கள்.

3. ஆள், ஆளன், ஆளம், ஆளி என்னும் பெயரீறு (nounsuffix) களும்,  அள், ஆள் என்னும் பெண்பால் விகுதிகளும்.

உ-ம்: வேலையாள், மணவாளன், மலையாளம், மலையாளி, அவள், வந்தாள்.

4. திரிபுபுணர்ச்சி: புணர்ச்சியில் டகர ணகரமாய்த் திரிவது பெரும் பாலும் ளகரம். ழகரம் மரூஉச் சொற்களிலன்றித் திரிவதில்லை.

உ-ம்:

கள் + குடி

கட்குடி

தெள் + நீர்

தெண்ணீர்

தமிழ் + சங்கம்

தமிழ்ச்சங்கம்

யாழ் + பாணம்

யாழ்ப்பாணம்

         ழகரம் சிறுபான்மை மரூஉப் புணர்ச்சியில் திரியும்.

உ-ம்:

வாழ் + நன்

வாணன்.

மகிழ் + நன்

மகிணன்

 சோழன் (சோழ்) + நாடு

சோணாடு

(புழை) பூழ் + கை

பூட்கை (யானை)

நாழி + உரி

நாடுரி (1/2படி)

5. பெரும்பாலும் திசைச்சொற்களும் வடசொற்களும்

உ-ம்: பிரளயம்