பொருப்பு = மலை | பொறுப்பு = உத்தரவாதம் | மர = ஏ. கடினமாகு, உணர்ச்சியறு பெ. எ. மரத்தாலான | மற = ஏ. forget பெ.எ-மறச்சம்பந்த | மரம் = விருட்சம் | மறம் = வீரம், பாவம், ஒருகுலம்ஒரு கலம்பக உறுப்பு | மரல் = ஒரு பூண்டு | மறல் = வீரம், பாவம், சினம் | மரி = இற | மறி = ஏ. தடு. மடக்கு, பெ. ஓர் ஆடு,சில விலங்கின் பெண் | மரு = ஏ. பொருந்து பெ. மணம், ஒரு பூண்டு, மகனுக்குப் மற்ற பெண்வீட்டில் முதல் விருந்து | மறு = ஏ. refuse, deny .பெ. குற்றம்களங்கம் பெ. எ. மற்ற | மருகு = மருக்கொழுந்து | மறுகு = ஏ. மயங்கு. பெ. வீதி | மரை = ஒரு மான். விளக்குக்காய், திருகுசுரை | மறை = ஏ. ஒளி பெ.ஒளிவு.இரகசியம், வேதம், மறுத்தல் | மாரன் = மன்மதன் | மாறன் = பாண்டியன், பகைவன் | முருகு=மனம்,இளமை,அழகு,வேகுமுருகன், ஒரு காதணி | முறுகு = திருகு, பதங்கடந்து | முருக்கு = ஒரு மரம் | முறுக்கு = ஏ. திருக்கு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி. பெ. திருக்கு, ஒரு பலகாரம் | வரம் = gift | வறம் = வறட்சி | வரை = ஏ. draw, marry நீக்கு பொருந்து பெ. வரி, கணு, மூங்கில்,மலை, அளவு | வறை = பொரித்த காய்கறி | விரகு = தந்திரம் | விறகு = எரிக்குங் கட்டை | விரல் = finger | விறல் = வெற்றி, வல்லமை,மெய்ப்பாடு, சுவை | விரை = ஏ.விதை.வேகமாபெ.விதை | விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள்,குளிரால் நடுங்கு | வெரு = அச்சம் | வெறு = ஏ. பகை, நிரம்பு. பெ. எ. ஒன்றுமில்லாத, தனியான. | சில சொற்கள் ரகர றகர வேறுபாடின்றி எழுதப்படும். அவையாவன:- காரல், காறல்; சுரண்டு, சுறண்டு; சுரீர், சுறீர்; சுருத்து, சுறுத்து; சுருசுருப்பு, சுறுசுறுப்பு ; தருவாய், தறுவாய்; புரந்தா, புறந்தா; முரி, முறி. தவிர, தவற என்னுஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்கக் கூடாது. தவிர = except , தவற = to fail. சில சொற்களில் வருபவை ரகரமா, றகரமா என்னும் ஐயப்பாட்டை அச் சொற்களின் மூலத்தையேனும் பகுதியை யேனும் அறிந்து அகற்றிக் கொள்க. |