துர = செலுத்து | துற = பற்றுவிடு, நீக்கு |
துரு = அழுக்கு | துறு = நெருங்கு |
துரை = பிரபு, வெள்ளைக்காரன் | துறை = நீர்நிலையில் இறங்குமிடம், வண்ணான்துவைக்கும் இடம், துறைமுகம் ( harbour ) பிரிவு |
தெரி = தோன்று, அறி, select | தெறி = இறைத்துவிழு, தகர்ந்து விழு விரலாற் சுண்டு. |
தெரு = வீதி | தெறு = அழி |
தேரல் = ஆராய்தல் | தேறல் = தெளிதல், தேன்,தேர்வில் தேறுதல் |
நரை = ஏ.மயிர்வெளு.பெ.வெண்மயிர், | நறை = தேன் வெள்ளை |
நிரை =ஏ.வரிசையாய்வை.பெ.வரிசை, மந்தை, ஓர் அசை | நிறை=ஏ. நிரப்பு பெ. கனம், நிறுத்தல், மனவடக்கம். |
நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு,விரல் சுடக்கு | நெறி = பெ. வழி, அண்டை, மதம், ஏ. புருவத்தை வளை, மயிர்சுருள் |
பர = ஏ. விரி, பரவு. பெ.எ. மற்ற. | பற = to fly |
பரவை = கடல், சுந்தரமூர்த்தியின் முதல் மனைவி, செவி வழக்கு | பறவை = பட்சி |
பரம்பு = ஏ. பரவு, அடி | பறம்பு = பாரியின் மலை |
பரம்படித்தல் = உழுதநிலத்தைச் சமம்படுத்துதல் | |
பரி = இரங்கு, வருந்து, விரும்பு. அன்புகூர். | பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு |
பரை = பார்வதி | பறை = ஏ. சொல். பெ. மேளம், ஒரு குலம் |
பாரை = கம்பி | பாறை = பெருங்கல், கல்நிலம் |
பிர = ஒரு வடமொழி உபசர்க்கம் ( prefix ) | பிற = ஏ. தோன்று, உண்டாகு. பெ. எ. மற்ற |
பிரை = புளித்த மோர் | பிறை = குறைச் சந்திரன், சந்திரன் கலை |
புரம் = ஊர், நகர், காப்பு | புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி. |
புரவு = காப்பு, ஆட்சி | புறவு = முல்லைநிலம், புறம்போக்குபுறா |
பெரு = பெரிய | பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு,மதிப்புப் ªÐஊ |
பொரி=ஏ.தானியம்பொரி,பொரிபோலெழும் தீ பெ. வறுத்த தானியம் | பொறி = ஏ. தீட்டு, எழுது, செதுக்குபெ. தீத்துகள், புலனுறுப்பு, trap |
பொரு = ஒப்பாகு, பொருந்து, போர்செய். | பொறு = சும, சகி, காத்திரு, ஏல் |
பொருக்கு = சோற்று வடு | பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு,தெரிந்தெடு |