பக்கம் எண் :

6கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

கருப்பு = ஒரு நிறம்

கறுப்பு = ஒரு நிறம், கோபம்

கரை = ஏ. dissolve , கத்து, அழு பெ. அணை, எல்லை, பங்கு

கறை = களங்கம், இரத்தம்

கிரி = மலை

கிறி = இடும்பு, கிறுக்கு

குரம் = குளம்பு   

குறம் = குறிசொல்லல், ஒரு பிரபந்தம்ஒரு கலம்பவுறுப்பு

குரவன் = பெரியோன்

குறவன் = ஒரு குலத்தான்

குரங்கு = ஒரு விலங்கு

குறங்கு = தொடை ( thigh )

குரவை = ஒரு கூத்து

குறவை = ஒரு மீன்

குரு = நிறம் , ஆசிரியன்

குறு = ஏ. கொய் பெ. எ. குட்டையான குறுகுறு = ஓர் இரட்டைக்கிளவி

குருகு =  நாரை, கொக்கு, அன்னம்

குறுகு = கிட்டு, சுருங்கு

குருக்கு = ஒரு செடி

குறுக்கு = ஏ. சுருக்கு வி. எ. ஊடே பெ. நடுமுதுகு

குருமா = ஒருவகைக் குழம்பு

குறுமா = சிறு விலங்கு

குருமான் = குருவின் மகன், ஒரு குலம், விலங்கின்குட்டி

குறுமான் = சிறுமான், சிறுமகன்

குரும்பை = தென்னை, பனை

குறும்பை = ஓர் ஆடு முதலியவற்றின் பிஞ்சு

குரை = ஏ. குலை பெ. குலைத்தல், ஓர் அசைநிலை

குறை = ஏ. சுருக்கு பெ.நிரம்பாமை,         குற்றம்

கூரை = முகடு

கூறை = ஆடை

சுரா = ஒரு பானம்

சுறா = ஒரு மீன்

சூரை = ஒரு செடி

சூறை = கொள்ளை,சுழல் காற்று   (சூறாவளி)

செரி = சீரணி,

செறி = ஏ. திணி, அடக்கு,நெருங்கு,பெ. ஓர் அணி

செரு = போர்.

செறு = ஏ.கோபி, அழி, நெருங்கு, நிறை, திணி   அடக்கு, பெ. வயல்

சொரி = பொழி

சொறி = ஏ. பறண்டு, தினவுநோய் பெ. ஒரு நோய். சுரசுரப்பு

தரி = அணி, பொறு

தறி = ஏ. வெட்டு பெ. கம்பம், முளை

தரிப்பு = கடுக்கன் 

தறிப்பு = வெட்டுதல்

தரு = பெ. மரம், தருகிற பெ. எ.

தறு =கட்டு, முடி

திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி

திறம் = வலிமை, பக்கம், வகை

திரை = ஏ. மேலிழு, திரள்  அலைபோல்

திறை = கப்பம் மேடுபள்ளமாகு பெ. screen,curtain , அலை