பக்கம் எண் :

எழுத்தியல்27

ஆண்பால் 

பெண்பால்

பார்ப்பான்        

பார்ப்பாத்தி

பார்ப்பனன்       

பார்ப்பனி

பிரான்           

பிராட்டி

புண்ணியவான்     

புண்ணியவதி

பெருமான்        

பெருமாட்டி

மாணவன்         

மாணவி

மாணாக்கன்       

மாணாக்கி

வணிகன்         

வணிகச்சி

வாலன் வாலிபன்     வாலியோன்

வாலை

வீரன்      

வீரி

வெள்ளாளன்      

வெள்ளாட்டி

வேளாளன்       

வேளாட்டி

     குருவிக்காரிச்சி, கொல்லைக்காரிச்சி, வெள்ளாட்டிச்சி முதலிய பெண்பாற் பெயர்கள் ஒருபயனுமின்றி இருபெண்பால் விகுதியேற்ற மையின் வழுவாகும்.

தெய்வப் பெயர்:

ஆண்பால் 

பெண்பால்

இந்திரன்   

இந்திராணி  

காமன்

இரதி

சிவம்

சத்தி

சிவன்

சிவை

திருமால்   

திருமகள்

நான்முகன்  

நாமகள்

(பிரம்மா)   

(சரஸ்வதி)

பரன் 

பரை

அஃறிணைப் பெயர்

ஆண்பால் 

பெண்பால்

பொதுப்பால்

அலவன்         

பெடைநண்டு

நண்டு

அன்னச்சேவல்   

அன்னப்பெடை

அன்னம்

எருமைககடா       

எருமைக்கிடாரி

எருமை

கடா       

மறி

ஆடு

கடுவன்          

மந்தி

குரங்கு

கலை      

பிணை

மான்

களிறு      

பிடி

யானை

சேங்கன்று        

கிடாரிக்கன்று

கன்று

சேவல்         

பெட்டைக்கோழி

கோழி

     இங்குக் கூறிய அஃறிணையிருபாற் பாகுபாடு வழக்குப்பற்றியது; இலக்கணம் பற்றியதன்று.

   இங்குக் கூறாத பிற அஃறிணைப் பெயர்கட்கெல்லாம் ஆண்பாற்கு ஆண் என்பதும், பெண்பாற்குப் பெண் என்பதும் அடையாகச் சேர்க்கப்படும். பெண் என்பது பெட்டை என்றும் திரியும். பெட்டை என்பது விலங்கிற்கும், பெடை என்பது பறவைக்கும் பெரும்பாலும் உரியவாகும்.

   மறி என்பது உலக வழக்கில் கழுதை குதிரைகளின் பெண்பாலை உணர்த்தும். ஏறு என்பது நூல் வழக்கில் சிங்கம், புலி, மாடு முதலியவற்றின் ஆண்பாலை யுணர்த்தும்.