இழிவடைந்த சொற்கள் - Degraded Words சில சொற்கள் வழக்குப்பற்றியும், மக்களின் ஒழுக்கக்குறைபற்றியும் இழிவடைந்துள்ளன. அவற்றை விலக்கல் வேண்டும். உ-ம்: சொல் | முன்னைப்பொருள் | இற்றைப்பொருள் | தேவடியாள் | a female devotee | வேசி, விலைமகள் | சிறுக்கி | சிறுமி | கீழ்மகள் | பயல் | பையன் | கீழ்மகன் | உயர்வடைந்த சொற்கள் - Elevated Words சில சொற்கள் நாளடைவில் தம் தீப்பொருள் மாறி நற்பொருள் பெற்றுள்ளன. அவற்றை நற்பொருளிற் கொள்ளவேண்டும். உ-ம்: சொல் | முன்னைப்பொருள் | இற்றைப்பொருள் | களி | குடிவெறி | மகிழ்ச்சி | பொருட்டிரிபு - Change of Meaning சில சொற்கள் தாம் முதலிற் குறித்த பொருளை யிழந்து இன்று வேறு பொருள் குறிப்பனவாகும். அவற்றைப் புதுப் பொருளிலேயே வழங்கவேண்டும். உ-ம்: சொல் | முன்னைப்பொருள் | இற்றைப்பொருள் | எண்ணெய் (எள் +நெய்) | நல்லெண்ணெய | Oil | பண்டாரம் | ஞானி, துறவி | காவியுடுத்த பிச்சைக்காரன், பூக்காரன் | பரதேசி | அயல்நாட்டான் | பண்டாரம் | போக்கிரி (போக்கிலி) | ஏழை | துன்மார்க்கன் | விருந்து | விருந்தாள் | விருந்துணவு | சில துணைவினைகள் உடன்பாட்டில் தம் பழம் பொருளையும், எதிர்மறை யில் அதையிழந்தும் இழவாதும் ஒரு புதுப்பொருளையும் உணர்த்துவனவாகும். உ-ம்: உடன்பாடு | எதிர்மறை | செய்யமாட்டுவேன் - I can do | செய்யமாட்டேன் I will not do | செய்யக்கூடும் - can do | செய்யக்கூடாது - Should not do | செய்யமுடியும் - can do | செய்யமுடியாது - cannot do, will not do | செய்யப்படும் - will be done | செய்யப்படாது - will not be done, should not do, or should not be done. | |