படாது என்னும் துணைவினை விலக்குப் (prohibition) பொருளில் எல்லாப் பாற்கும் இடத்திற்கும் ஏற்கும்; நிகழாமை அல்லது கூடாமைப் பொருளில் படர்க்கை ஒன்றன்பாற்கு மட்டும் ஏற்கும். உ-ம்: 1. அவன், அவள், அவர் இங்கே வரப்படாது அது, அவை. } (impersonal) 2. அது அகப்படாது - It cannot be got or caught அது சொல்லப்படாது - It will not be told நன்மைக்கும் தீமைக்கும் பொதுவான சில குணப்பெயர்கள் நாளடைவில் பொதுமை நீங்கி, நல்லது அல்லது தீயதைமட்டும் உணர்த்தும். உ-ம்: மணம், வாசணை - நறுமணம், நல்ல வாசனை நாற்றம், வீச்சம் - தீய வாசனை இகழ்ச்சிச் சொற்கள் - Ridiculous Terms கிழம், கிழடு போன்ற இகழ்ச்சிச் சொற்களைக் நீக்கிக் கிழவன் கிழவி போன்ற சிறந்த சொற்களைக் கொள்ளவேண்டும். இழிசொற்கள் - Slang words அன்னா! (அந்தா!), ஆச்சு, கண்ணாலம், தவக்களை, தவக்கா, பீச்சங்காய், பெண்சாதி, மச்சான், மச்சாவி, வரச்சே, வரச்சில, வெஞ்சனம் முதலிய இழிசொற்களை நீக்கி உயர்சொற்களை வழங்கவேண்டும். வழூஉச் சொற்கள் - Erroneous Words பிழை | திருத்தம் | பிழை | திருத்தம் | அதுகள் | அவை | எகனை | எதுகை | அமக்களம் | அமர்க்களம் | எண்ணை | எண்ணெய் | அமயம்போடு | அபயம்போடு | ஏழரைநாட்டான் | ஏழரையாட்டையான் | அமிஞ்சி | அழுமூஞ்சி | ஏழரைநாட்டுச்சனியன்- | ஏழரையாட்டைச்சனியன் | அய்யர் | ஐயர் | கடற்கண்ணி | கடற்கன்னி | அரட்டவாளை | அரைத்தவளை | கடாரங்காய் | கடாநாரத்தங்காய் | அலமேல் | அலர்மேல் (மங்கை) | கண்ட்ராவி | கண்ணராவி | அவங்க,அவன்கள் | அவர்கள் | கண்ணாலம் | கலியாணம் | அறுதலி | அறுதாலி | கண்ணுக்குமாசியாய் | கண்ணுக்குள் மாசாய் | ஆத்துக்கு | அகத்துக்கு | கந்தட்டி | கண்திருஷ்டி,கண்திருட்டி. | ஆம்படையான் | அகமுடையான் | கம்மநாட்டி | கைம்பெண்டாட்டி | ஈர்கலி | ஈர்கொல்லி | காணும் | காணேன்(தன்மைஒருமை) | உருத்து | உரித்து | | | உன்னி | உண்ணி | | | ஊரணி | ஊருண்ணி, ஊருணி | | | |