பக்கம் எண் :

எழுத்தியல்3

     தமிழிலில்லாத வடவெழுத்துகளிருப்பதனாலும், தமிழில் மொழிமுதலிடை கடைகளில்  வராத  எழுத்துகள்  மொழி முதலிடை  கடைகளில்  வருவதனாலும், வடசொற்களை   ஒருவாறு   அறியலாம்.   தமிழறிவில்லாத   மாணவர் தமிழாசிரியர் வாய்க்கேட்டே வடசொற்களை யறிதல் கூடும்.

2. மெய்யீறு

     மொழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே யன்றி வல்லின றகர மன்று.

    உ-ம்: அவர், ஊர், குதிர், இடக்கர்

3. இணைமெய்

     மொழியிடையில்  இணைந்து  (இசைந்து)  வரும்  இரு    மெய்களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின ரகரமே. வல்லின றகர மெய்யை யடுத்து வேறொரு மெய்யும் வருவதின்று.

உ-ம்:

பிழை 

திருத்தம்

நேற்த்தி

நேர்த்தி

முயற்ச்சி 

முயற்சி

     குறிப்பு: கரம், காரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலும் காரம், காரன், காரி என்னும் பெயர் விகுதிகளிலும், தா, வா என்னும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம்.

       பிறவிடங்களை ஆசிரியர்வாய்க் கேட்டறிக.

       உ-ம்: இகரம், ஈகாரம்

           இளக்காரம், அதிகாரன், அதிகாரி.

           தரவு, தருகிறான்; வரவு, வருகிறான்.

றகரம் வருமிடங்கள்

1. இரட்டித்தல்

         இரட்டிக்குமிடமெல்லாம் வல்லின றகரமே. இடையின ரகரம் இரட்டிக்காது.

        உ-ம்: வெற்றி, அற்ற, கற்றோர், ஆற்றை

2. னகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல்

         னகரமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல்லின றகரமே.

        உ-ம்: கன்று, சென்றான், பஃறி.

3. நிகழ்கால இடைநிலைகள்

        கிறு, கின்று, ஆநின்று.

       உ-ம்: இருக்கிறான், எழுகின்றான், ஓடாநின்றான்.

4. இணைக்குறின் மொழியல்லாத சொற்களிலெல்லாம் உகரவீ ஏறி வருவது வல்லின றகரம

       உ-ம்: காறு, களிறு.