பிழை | திருத்தம் | ஊரு, குளிரு | ஊர்,குளிர் | 4. குற்றியலுகரம் குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே. ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மே லேறிவரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க. உ-ம்: ஆறு, கிணறு, மற்று, கன்று. 5. புணர்ச்சித் திரிபு ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே. உ-ம்: ல் - கல் + பலகை | கற்பலகை. | கல் + தாழை | கற்றாழை | வருதல் + கு | வருதற்கு. | ன் - தன் + பெருமை | தற்பெருமை. | பொன் + தோடு | பொற்றோடு. | அதன் + கு | அதற்கு. | வந்ததன் + கு | வந்ததற்கு. | 5. தற்பவத்திரிபு வடசொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துகள் தமிழில் திரியக் கூடியது வல்லின றகரமாயே. உ-ம்: உத்சவம் | உற்சவம் | பஸ்மம் | பற்பம் | அல்பம் | அற்பம் | ரகர றகரச் சொற்கள் அரம்= ஓர் ஆயுதம் | அறம் = தருமம் | அரவு = பாம்பு, ஒர் தொழிற்பெயர் விகுதி | அறவு = நீக்கம், முடிவு | அரன் = சிவன் | அறன் = தருமம் (போலி) | அரா = பாம்பு, சிவனே! | அறா = நீங்கா,நீங்காத(அம்பறாத்தூணி) | அரா =ஏ. காய்களைச் சிறிதாயறு பொருள்களைச் சிறிது சிறிதாய்ச் சேர், பயிர்களைஅறு,எறும்புபோல்பொருள்களைத்தின பெ. அரிக்கட்டு, திருமால் | அறி = தெரிந்துகொள். | அரு = பெ. வடிவில்லாதது பெ. எ. அரியஅருமையான | அறு = ஏ. நீங்கு பெ. எ. ஆறு (six) | |