பக்கம் எண் :

34கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

ப - வ பகு - வகு, பதி - வதி, படிவம் - வடிவம்.

ம - ந முகம் - நுகம், முனி - நுனி, முனை - நுனை.

ம - வ குமி - குவி, மிஞ்சு - விஞ்சு, மீறு - வீறு, மேய் - வேய்.

ம - ன அறம் - அறன், கடம் - கடன், கலம் - கலன், குணம்- குணன், குலம் - குலன், பயம் - பயன், புலம் - புலன், புறம், புறன்.

ய -ச அயர் - அசர், இயை -இசை, ஈயல் - ஈசல், கயம் - கசம், குயவன் - குசவன், கைகேயி - கைகேசி, நெயவு - நெசவு, நேயம் - நேசம், பியை - பிசை, வயம் - வசம்.

ர - ல இருப்பை - இலுப்பை.

ல - ர குடல் - குடர், குதில் - குதிர், சாம்பல் - சாம்பர், பந்தல் - பந்தர், போக்கிலி - போக்கிரி.

ல - ள கம்பலம் - கம்பளம், செதில் - செதிள், திமில் - திமிள், மங்கலம் - மங்களம், மதில் - மதிள்.

வ - க குவை - குகை, சிவப்பு - சிகப்பு, சாவ - சாக, செய்வேன் - செய்கேன், தாவம் - தாகம், படவு - படகு.

     கெருடன், கெர்வம், தெரிசனம், பிச்சு (பித்து), வைச்ச (வைத்த) முதலிய போலிகள் வழுவும், அசிரை, உசரம், உசிர். பசன், மசங்கு முதலிய போலிகள் இழிவழக்குமாகும்.

ii. இலக்கணப்போலி -
Metathesis

     கோவில் - கோயில், சதை - தசை, விசிறி - சிவிறி, வைசாகி - வைகாசி - சும்மாவிரு - சும்மாயிரு.

iii. போலித்திரிபு -
Corruption on the principle of Permutation

     இகல் - இசல் (to compete); ஈந்து - ஈஞ்சு ; உடம்பிறந்தான் உடன்பிறந்தான் - உடப்பிறந்தான்; என்னவோ - என்னமோ ; ஐந்து - அஞ்சு; கூதல் - கூதிர்; கை -கய - கச ; கோடரி - கோடாரி, கோடாலி; கோடு -கோணு; கௌதாரி - கவுதாரி - கதுவாலி; சேலை - சீலை; திறம் - திறன், திறல்; துருக்கர் - துலுக்கர்; நீத்து - நீச்சு; நீந்து - நீஞ்சு ; பக்கம் - பக்கல்; பையன் - பையல்; - மறம் - மறன் - மறல்; மைந்தன் - மஞ்சன்; வண்டி - பண்டி; வாயில் - வாயல் - வாசல்; விதை - விரை.


பல்வடிவச் சொற்கள் - Polyforms of words


     அக்கை, அக்காள், தமக்கை; அங்கு, ஆங்கு; அடைமானம், அடைவு, அடவு, அடகு; அண்ணன், அண்ணாச்சி, அண்ணாத்தை, தமையன்; அண்மை, அணிமை; அம்மை, அம்மாள்; அரண்அரணம்; அரா, அரவு, அரவம்; அவகாசம், சாவகாசம்; அவை, அவையம்; அற்பசி, ஐப்பசி; ஆ, ஆன்; ஆசனம், ஆதனம்; ஆசிரியன், ஆசான்; ஆன்மா, ஆத்துமா, ஆத்துமம்; இங்கு, ஈங்கு, இடக்கு,