பக்கம் எண் :

38கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

     அரைப்படித்தவன் - குறைவாகக் கற்றவன்
     அறப்படித்தவன் - முற்றக்கற்றவன்.

அல்ல, இல்லை.

     ஒன்று இன்னொன் றல்லாமையை அல்ல என்னுஞ் சொற்குறிக்கும்;
     ஒன்று ஓரிடத்தி லின்மையை இல்லை என்னுஞ் சொற் குறிக்கும்.

     உ-ம்: அவன் இராமன் அல்ல -
He is not Rama.
        இராமன் இங்கே இல்லை -
Rama is not here.

     அவன் இராமனில்லை என்பது வழு. இதில் இராமன் என்பது இராமனாய் என்று எச்சப்பொருள்படின் வழாநிலை.

அவசரம் - urgency .    அவசியம் - necessity.

அளி - ஏ - present    கொடு - ஏ. give.

ஊர்கோலம் - ஊரை வலமாகச் சுற்றாமல் ஊர்ந்து செல்லல்.

ஊர்தல் = வாகனத்திற் செல்லல், பையச் செல்லல்.

ஊர்வலம் = ஊரை வலமாகச் சுற்றுதல்.

கட்டடம் = binding, setting, construction, building.

கட்டிடம் = site

கருப்பு - blackness. கறுப்பு - rage, darkening of the face throughanger.

குமரன் - இளைஞன், வீரன். குமாரன் - மகன்.

 குமரி - இளையள், வீரி. குமாரி - மகள்.

குற்றஞ்சாட்டு - accuse. குற்றஞ்சாற்று - tell the crime.

சவரஞ்செய்தேன் (பிறர்க்கு). சவரஞ்செய்துகொண்டேன் (எனக்கு).

கொள் - reflexive sign.

தகப்பனார் - ஒருமை (உயர்வுப்பன்மை). தகப்பன்மார் - பன்மை

தாழ்மை - humility. தாழ்வு = இழிவு, கீழ்மை.

தீஞ்சுவை = இனிய சுவை. தீச்சுவை = தீய சுவை.

தேன் + சுவை = தேஞ்சுவை,  தீஞ்சுவை.

தீ (தீமை) + சுவை = தீச்சுவை.


     இத்தகைய தொடர்களில் மெலிதோன்றுமிடத்து இனிமைப் பொருள்; வலிதோன்றுமிடத்துத் தீமைப் பொருள்.

தீன் - தின்பண்டம். தீனி - விலங்குணவு, சாப்பாடு - மக்களுணவு.

தேர்ந்தெடு - ஏ. examine and select. தெரிந்தெடு - ஏ. select, elect . நட்டு - ஏ. fix in the earth. நாட்டு - ஏ. establish.