நிறுத்து - ஏ. stop. post, make anything . நிறுவு - ஏ. establish . | பண்டிகை - வீட்டிற் கொண்டாடப்படுவது. | திருவிழா - வெளியே கொண்டாடப்படுவது. | பருமை - bulk . பெருமை - greatness, dignity, pride, excess, increase | புறக்கடை - backyard. புழைக்கடை - narrow passage. | பூக்கொல்லை = flower garden , பூங்கொல்லை - அழகிய தோட்டம். | இத்தகைய தொடர்களில் பூ என்பது மலரைக் குறிப்பின் பெரும்பான்மை வலியும் சிறுபான்மை மெலியும் மிகும் ; அழகைக் குறிப்பின் மெலியே மிகும். பொருள் - object, substance, matter, subject. | காரியம் - effect, purpose, deed. affair. | மாமன் - father-in-law. அம்மான்- maternal uncle | மாமன் - father-in-law . அம்மான்- maternal uncle | மிக்க - பெ. எ., மிக - வி. எ. உ-ம். மிக்கவூண், மிகவுண்டான் மயில் - peacock , மைல் - mile யாது, எது; சிறிதும் அறியாப் பொருளைப்பற்றி யாது என்றும், சிறிது அறிந்த பொருளைப்பற்றி எது என்றும் வினவல் வேண்டும். இங்ஙனமே யார், எவர் என்பனவும். வருமானம் - proper income. | வரும்படி - additional incame. | வழக்கம் - habit, custom. | பழக்கம் - practice, acquaintance. | விவரி - ஏ. give the details of. | விரி. - ஏ. expand. | சொற்குறுக்கம் - Abbreviations மாணவர் வியாசங்களில், மகா - ள - ள - ஸ்ரீ, மீ, உ, ரூ - அ - பை, கி.மு., கி.பி என்ற குறுக்கங்களைத் தவிரப் பிற குறுக்கங்க ளிருத்தல் கூடாது. பெருந்தொகைகளைக் குறிப்பிடும்போது, ஐஞ்சொல்லுள் அமைபவற்றை எழுத்தாலும், பிறவற்றை எண்ணாலும் குறிக்கலாம். உ-ம்: நாலாயிரத்தெழுநூற்றொன்று, |
|
|