புலிகொன்றயானை என்பதை, புலியாற் கொல்லப்பட்ட யானை, புலியைக் கொன்ற யானை என்று விரித்தெழுதுக. ஸ்கௌடோ செலவிற் குக் கல்வி கற்றார் என்பதை, குக் ஸ்கௌடோ செலவிற் கல்வி கற்றார் என்று மாற்றியெழுதுக. vii. பொருள்வலி - Energy or Force ஒரு செய்தியைப் பிறர் நம்புமாறு, தக்க ஏதுவும் மேற்கோளும் உவமையும் எடுத்துக்காட்டித் தகுந்த சொற்களால் வற்புறுத்திக் கூறுவது பொருள் வலியாகும். உ-ம்: "தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார், தமது தெய்வச் செந்தமிழ் மொழிமேல் வைத்த பற்றினையுஞ் செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணுந் தம் காலத்து நல்லிசைப் புலவர் மேற்கொண்ட தனிச் செந்தமிழ் வழக்கினையும் மீறி, ஆதிபகவன்’ என்னும் வடசொற்றொடரால் முழுமுதற் கடவுளுக்குத் தமது நூலின் முதலிலேயே பெயர் கூறுவாரானது, அத் தொடரின் முன்நின்ற ஆதி என்பது தம் அன்னையர்க்கும், பின்நின்ற பகவன் என்பது தம் தந்தையார்க்கும், பெயராயமைந்து, அவ் விருவரையுந் தமது நினைவிற் கொணர்தல் பற்றியேயாமென்பது திண்ணம்’’ -ஆசிரியர், மறைமலையடிகள். பொருள் வலியுறுத்தும் முறைகள்: "ஒருவன் உலக முழுதும் ஆதாயப்படுத்தினாலும், தன் ஆத்துமாவை யிழந்துவிடின் அவனுக்கு இலாபமென்ன?" - வினா ( Interrogation or Rhetorical Question ). "அவன் அரைகுறையாய்ப் படித்தவனல்லன்" - எதிர்மறை ( Litotes ) "அறத்தினும் ஆக்கமில்லை; அதை மறத்தலினுங் கேடில்லை" - உடன்பாடும் எதிர்மறையும். நாள் தவறினும் நாத்தவறான் - எதிர்மறையும்மை. கண்டேன் சீதையை - முறைமாற்று. செய்யவே செய்வான் - தேற்றேகாரம். viii. திட்டம் - Precision ஒரு பொருளை ஐயமும் மதிப்பும் பொதுநிலையுமின்றி இயன்றவரை வரையறையாய்ச் சொல்வது திட்டமாகும். உ-ம்: கம்பர் பல நூற்றுண்டுகட்கு முற்பட்டவர் என்னாது, 9ஆம் நூற்றாண்டின ரென்க. இங்ஙனமே பிறவும். ix. பொருத்தம் - Propriety ஒரு சொல்லை அதற்குரிய பொருளிலும், ஒரு பொருளுக்கு அதற்குத் தகுந்த சொல்லையும் வழங்குவது பொருத்தமாகும். உ-ம்:உண்டி வினை |