பக்கம் எண் :

56கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

viii. எழுத்தாளர் குறிப்பு.
       உ-ம்: பாண்டியன் என்னும் பெயர் பாண்டு என்னும் பெயரி
             னின்றும் பிறந்தது (பாண்டியன் என்பது வடசொல்லென
             மயங்கினர்போலும் )- கால்டுவெல்.

இரட்டைப்பிறைக்கோடு (
Double Brackets ) வருமிடம்:
 
பலவரிப் பொதுமை.

உ-ம்: சாத்தனது கருமை பண்புத்தற்கிழமை.
      சாத்தனது வரவு }

பகர அடைப்பு (
Large Bracket ) வருமிடம்:-

i. வரிக்கு மிஞ்சிய பகுதி.
உ-ம்: ஒருமையுடன் நினதுதிருவடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம் (உறவு வேண்டும்.

ii. பிறைக்கோட்டை உட்கோடல்
உ-ம்: (இங்குச் சாரியை (சார் + இயை) என்பது இரு சொற்களைச் சார்ந்து இசைக்கும் அசை)

குறிப்பு:- மொழிபெயர்ப்பு, பொருள்கூறல், விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற் சொற்றொடர் இயன்றவரை, தான் குறிக்குஞ் சொற் சொற்றொடரின் வடிவிலிருத்தல் வேண்டும்.

9. இடைப்பிறவைப்புக்குறி -
Parantheses or Double Dashes
உ-ம். ஐயா! உங்களைக் கண்டபோது - உண்மையைச் சொல்லுகிறேன் - எனக்கு அடையாளமே தெரியவில்லை.

10. இடைக்கோடு (
Dash ) வருமிடங்களாவன :

   i. தலைப்பு. உ-ம்: பெயர்ச்சொல்
 
   ii. தலைப்பு மொழிபெயர்ப்பு.
      உ-ம்: எழுத்தியல் -
Orthography

   iii. எண்ணியிடையீடு: (கணித அளவையிலும் காலக்கணக்கிலும்)
      உ-ம்: ரூ. 12-10-3, 24-9-1934.

   iv. சொற்றிரிபு குறித்தல்.
      உ-ம்: முன்னில் - முன்றில் - முற்றம்.

   v. வினா. உ-ம்: வெருவு, நீர்மை, கடமா - பொருள்தருக.

   vi. இலக்கணங் கூறல். உ-ம்: கொல்களிறு - வினைத்தொகை.

   vii. பொருள் கூறல்.
       உ-ம்: விளித்தல் - அழைத்தல்.