ii. மேற்கோள். உ-ம்: "ஒழுக்கமுடைமை குடிமை," என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன: தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொடர் தன்னையே குறித்தல்). உ-ம்: எ, பேடு. ii. வாய்பாடு. உ-ம்: செய்யும்,தான iii. சிறப்புக் குறியீடு உ-ம்: வடக்கிருத்தல் iv. மேற்கோட்குள் மேற்கோள். உ-ம்: இயேசு ஜனங்களை நோக்கி, "ஆயக்காரன் ஆலயத்திற்கு வெளியே நின்று, தேவனே பாவியாகிய என்மீது இரக்கமாயிரும் என்றான்" என்றார். v. பழமொழி. உ-ம். நூறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும். குறிப்பு:- மேற்கோட்குறி யிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது. 8. பிறைக்கோடு - Brackets ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன: i. மொழியெர்ப்பு. உ-ம்: கட்டி ( Solid )ப்பொருள். ii. பொருள் கூறல். உ-ம்: பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன். iii. விளக்கம். உ-ம்: நிலைமொழி (அதாவது முதலிலே நிற்கின்ற மொழி). iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல். உ-ம்: ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) இன்சொல்லாற் பேசவேண்டும். v. எண் (சிறுபிரிவு) உ-ம்: (1) vi. பாடபேதம். உ-ம்: கண்டது கற்கப் பண்டிதனாவான் (or ஆகான்). vii. உரையிற் சொல் வருவித்தல். உ-ம்: கல்லிடை - (இமய)மலையில். |