பக்கம் எண் :

62கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

     பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு; புலியும் மானும் ஒரு துறை யுண்ண, புலையனும் விரும்பாப் புன்புலால் யாக்கை;

     மணி மந்திர மருந்துகள், மயிலாடக் குயில்பாட மணங்கமழும் மலர்ச்சோலை, மலையிலக்கு, மனமொழி மெய்கள், மனோவாக்குக் காயங்கள், மன்னுயிரைத் தன்னுயிர்போல் எண்ணி; மாடமாளிகை கூடகோபுரம்;

     வடமொழியிலும் தென்மொழியிலும் வல்லவராய், வழி துறை தெரியாமல், வாசா கைங்கரியம், வாழையடி வாழையாய், வாழ்நாளை வீணாளாகக் கழித்து, வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து, வானோர் புகழ மண்ணோர் மகிழ, விதித்தன செய்து விலக்கியன ஒழித்து, விலாப் புடைக்க வுண்டு; வெட்ட வெளிச்சம் பட்டப் பகலாய், வெண்சாமரை வீசி ஆலவட்டம் பரிமாறி, வெள்ளிடைமலை, வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் தெரியும், வெறுவாய்ச்சொல் வீரர், வேதாகம புராணேதிகாசங்கள்.