பக்கம் எண் :

எழுத்தியல்63

IV அணியியல் - Rhetoric


     உரைகளை அழகாகவும் பொருள்வலியோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லணி பொருளணி என இருவகைப்படும்.

i. சொல்லணி-
Figures of Speech relating to sound

(1) மோனை, (2) எதுகை, (3) மடக்கு - இவற்றை இலக்கண நூல்களுள் கண்டுகொள்க.

ii. பொருளணி -
Figures of Speech relating Sense

(1) தன்மை, (2) உவமை, (3) உருவகம், (4) வேற்றுமை - இவற்றை
   இலக்கண நூல்களுள் கண்டுகொள்க.

(5) முரண் அணி.

பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம் அது மூவகைப்படும்.

i. எதிர்நிலை முரண் -
Oxymoron
    உ-ம்: மெய்யானபொய், இது அதினும் சிறிது பெரிது.

ii. ஒரு பொருள் முரண் -
Epigram
    உ-ம்: அவன் ஆண்டில் இளைஞன், அறிவில் முதியன்.

iii. இருபொருள் முரண் -
Antithesis
    உ-ம்: "காலையு மாலையுங் கைகூப்பிக் கால்தொழுதல்."

(6) உயர்வுநவிற்சி, (7) பலபடப்புனைவு, (8) வஞ்சகப்புகழ்ச்சி, (9) தற்குறிப் பேற்றம், (10) சுவை , (11) வேற்றுப்பொருள் வைப்பு. இவற்றை இலக்கண நூல்களுள் கண்டு கொள்க.

(12) நிகழ்ச்சியணி -
Vision

     ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை, இன்று நிகழ்வது போலக் கூறுவது நிகழ்ச்சியணியாம்.

     உ-ம்: கெத்செமனேயில் இயேசு சீடர்களைவிட்டுத் தனித்துச் செபம் பண்ணுகிறார். சீடர்கள் தூங்குகிறார்கள். இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார். ஒரு பெரிய பகைக்கூட்டம் வருகிறது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான். பகைவர் இயேசுவைப் பிடிக்கிறார்கள்.