பக்கம் எண் :

நன்னூல் நன்னூலா? 17

-17-
 

3. நன்னூல் நன்னூலா? 

 

இரு கருத்துகளை யுணர்த்தும் பகுசொல்லே யென வறிக. ஒன்று என்பது ஓர் எண்ணையும் ஒருமை என்பது ஒன்றாயிருக்குந் தன்மையையும் உணர்த்தும். இங்ஙனமே பச்சை என்பது ஒரு நிறத்தையும் பசுமை என்பது பச்சையாயிருக்கும் தன்மையையும் உணர்த்தும்.

    மேலும் செந்தமிழ், சிறுநாவல் முதலிய பண்புத்தொகைச் சொற் களின் நிலைமொழிகள் செம், சிறு என இயல்பாக நின்றவையே யன்றி, செம்மை, சிறுமை, முதலியன ஈறுகெட்டு நின்றனவல்ல. சிறு, புது, மேல் முதலிய பண்புச் சொற்கள் இயல்பாக நின்று குறிப்புப் பெயரெச்சமா யிருக்குமென்றும், பண்புப் பெயராகும் போது மையீறு பெறுமென்றும், அறிதல் வேண்டும், செம், சேய், தீ, வெம், மெல், திண் முதலிய அடிச் சொற்கள் சிறு, புது முதலியனபோல, எளிதாய் அல்லது விளக்கமாய்ப் பொருளுணர்த்தாமைக்கு அவற்றின் வழக்கின்மை அல்லது அருகிய வழக்கே காரணம்.

    Red, small, remote முதலிய ஆங்கிலக் குறிப்புப் பெயரெச்சங்கள் ness என்னும் ஈறுபெற்ற பின்னரே  redness, smallness, remoteness  எனப் பண்புப் பெயராகும். அஃதன்றி redness என்னும் பண்புப் பெயரே ness என்னும் ஈறுகெட்டு red என நின்றது எனின் அதை ஆங்கில இலக்கணி யரும் ஒப்புக்கொள்ளார். ஆகவே, 'ஈறு போதல்', என்பது வழுப்படக் கூறலே என அறிக.

    அஃதாயின் பண்புத்தொகைச் சொல்லிடையே 'ஆகிய' என்னும் பண்புருபு விரியுமா றெங்ஙனெனின் பண்புத்தொகைச் சொல் தொகை யெனப் பெயர் பெற்றிருப்பினும் உண்மையில் ஒரு சொல்லுந் தொக்கதன்று என்றும் செம்மையான தமிழ், பனையாகிய மரம் என்று விளக்க நடையில் விரித்துக் கூறும் வழக்கு நோக்கி, செந்தமிழ், பனைமரம் என்பன பண்புத் தொகையெனப்பட்டன வென்றும் மொழிநூலொட்டிய இலக்கணப்படி அது ஒரு மயக்கே என்றும் கூறி விடுக்க. சிவந்த நீர் என்னும் எளிய வழக்கில் எங்ஙனம் ஒரு சொல்லும் தொக்கிலதோ, அங்ஙனமே செந்நீர் என்னும் உயர்வழக்கிலும் என்க.

(2) வினையிடைநிலை

(1) இறந்தகால இடைநிலை

    ''தடறவொற் றின்னே யைம்பால் மூவிடத்
     திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை'' (142)

    என்றார் நன்னூலார்.

    ''எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே'' (தொல். 640)

    என்றும், தனித்து நின்று பொருள் தராத இடைச்சொற்களும் ஒரு காலத்துத் தனித்து நின்று பொருள் தந்த பெயர் வினைச் சொற்களின் சிதைவே