எ-கா: |
ஆங்கனம்
-
ஆங்ஙனம் |
|
ஈங்கனம்
- ஈங்ஙனம் |
|
எங்கனம்
-
எங்ஙனம் |
|
யாங்கனம்
-
யாங்ஙனம் |
|
அங்கனம்
-
அங்ஙனம் |
|
இங்கனம்
-
இங்ஙனம் |
இக்காலத்து
மொழியாராய்ச்சியும் ஒலியாராய்ச்சியும் அக்காலத் தில்லாமையும், நன்னூலார்
வழுவியதற்குக் காரணமாகும்.
இனி, சுட்டையும் வினாவையும் ஒட்டி
ஙகரமும் மொழிமுதலாகும் என்று நன்னூலார் கூறியது சரியே என்று வலிப்பார் உளரெனின்
அந்த வண்ணம், இந்த வண்ணம், எந்த வண்ணம் என்பன, முறையே அன்னணம்,
இன்னணம், என்னணம் எனத் தொக்கும் திரிந்தும் வருமாதலின்,
சுட்டுட னெகர வினாவழி
யவ்வை ஒட்டி னவ்வு முதலா கும்மே
எனவும் விதித்தல் வேண்டும் எனக்
கூறி விடுக்க.
2.
பதவியல் (1) பண்புப்
பெயர்
''செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை
மேன்மை திண்மை யுண்மை நுண்மை யிவற்றெதிர்
இன்னவும் பண்பிற் பகாநிலைப்
பதமே'' (135)
என்னும்
நூற்பாவால், பண்புப் பெயர்களெல்லாம் மையீறு பெற்றே நிற்கும் என்பது படவும் பண்புப்
பகுதியின் திரிபுகளைக் கூறும் நூற்பாவில் (136) 'ஈறு போதல்' என்னுந் தொடரால்
பண்புத்தொகைச் சொற்களிலுள்ள நிலைமொழி யெல்லாம் ஈறுகெட்டவையே யென்றும்
குறிப்பாய்க் கூறியுள்ளார் நன்னூலார்.
அன்பு, அழகு, சினம், பச்சை
முதலிய பண்புப் பெயர்கள் பிறவீறும் பெற்று வருவதால் பண்புப் பெயரீறு மையொன்றே
யென்பது குன்றக் கூறலாம்.
செம்மை சிறுமை முதலிய மையீற்றுப்
பண்புப் பெயர்களெல்லாம் சொல்நிலையாற் பகுசொல்லாயினும் பொருள்நிலையாற்
பகாச்சொல்லாம் என்பது அறிவித்தற்குப் 'பண்பிற் பகா' என்று ஆசிரியர் கூறியதாக உரை
யாசிரியர் சிலர் கூறுவர். மையீற்றுப் பண்புப் பெயர்கள் சொல்நிலை யால்
மட்டுமன்றிப் பொருள்நிலையாலும் பகுசொல்லே யென்பது நுணுகி நோக்குவார்க்குப் புலனாம்.
மையீறு தன்மை குறிக்குஞ் சொல்லாதலின் மையீற்றுப் பண்புப் பெயர்களெல்லாம்
பண்பும் பண்புத் தன்மையுமாகிய |