புறப்பாட்டு |
அகப்பாட்டு |
பெருஞ்சோறு வழங்கியது ''பிண்ட மேய
பெருஞ்சோற்று நிலை'' போன்ற விருந்து. |
பெருஞ்சோறு வழங்கியது தென்புலத்தார் கடன போன்ற
சடங்கு. |
பாண்டவரையும் கௌரவரையும குறிக்கும் ''ஐவர்'', ''ஈரைம்பதின்மர்'' என்னும்
சொற்கள் உள. |
பாண்டவரையும் கௌரவரையுங்குறிக்கும் ஒரு
சொல்லுமில்லை. |
பாடப்பட்டவன் பெயர் உதியஞ்சேரலாதன் |
பாடப்பட்டவன் பெயர் உதியஞ் சேரல். |
பாடியவர் தலைக்கழகத்தார் |
பாடியவர்
கடைக்கழகத்தார். |
இங்கிலாந் தரசருள், என்றி
என்ற பெயர் கொண்டு, எண்மரும், வில்லியம் என்று பெயர் கொண்டு நால்வரும்,
எட்வர்டு என்று பெயர் கொண்ட எண்மரும், சியார்சு என்று பெயர் கொண்ட அறுவரும் இருந்
திருக்கின்றனர். இதை நோக்கின், உதியஞ் சேரலாதன், உதியஞ்சேரல் என்னும்
பெயர்களின் ஒருபுடை யொப்புமை ஒருவனைக் குறிக்குஞ் சான்றன்மை புலனாம்.
6. கடைக்கழகக் காலத்துப் பராசரன் என்னும்
சோணாட்டுப் பிராமணன் சேரனிடம் பரிசுபெறச் சென்றதை,
'பெருஞ்சோறு பயந்த
திருந்துவேற் றடக்கை திருநிலை பெற்ற பெருநா
ளிருக்கை ......................................... வண்டமிழ் மறையோற்கு
வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடு நாடு மூரும்
போகி நீடுநிலை மலையம் பிற்படச் சென்று' (சிலப். கட்டுரை, 55-66)
என
இளங்கோவடிகள் பாடுகின்றார்.
இதில் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனின் சோற்றுக்
கொடை குறிக்கப்படுகின்றது. அருஞ்சொல் உரையாசிரியரும், 'பெருஞ்சோறு பயந்த என்றது
சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் பாரத யுத்தத்தில் எல்லோர்க்கும் உணவளித்த
செய்தியை' என மரபு வழாது வரைந் திருக்கின்றார். ஓர் அரசனை ஒரு புலவன் புகழும்
பாட்டில், அவன் முன்னோர் செயலையும் அவன்மீது ஏற்றிக் கூறுவது செந்தமிழ்ப் பாடன்
மரபு. இதை யுணராத நண்பர், 'பாரதப் போரில் சோறு கொடுத்த சேரனிடம் பரிசு பெற்ற
பராசரன், பாரத காலத்திற்குப் பிறகு (1500 ஆண்டுக்குப் பின்னர்) இருந்த சேர
அரசர்களை எப்படி வாழ்த்த முடியும்?' எனக் கால மலைவு கண்டவர்போல்
கேட்கின்றார்?
|