|
சமட்டு - சவட்டு - சவட்டை - சாட்டை. சாட்ட - catta(M.), சாட்டி - cati (K.),
ஜாட்டி - jati(T.). ஜாட்டி jati(U.). மத்திகை - Gk.
Mastix, mastigos.
சுருங்கை சுல்-சூல். சூலுதல் =
தோண்டுதல். ''நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை''
(நாலடி,44). சுல்-சொல்-சொலி. சொலித்தல் = கிழித்து உரித்தல். சொலி =
உரித்த தோல். சொல்- சொள்-சொள்ளல் = உள்ளீடற்ற
சொத்தை. சொள் - சொள்ளை = துளை, உள்ளீடற்றது,
சொத்தை. சொள் - சொண்டு = சொத்தை. 'சொண்டு மிளகாய் வற்றல்' என்பது
பாண்டிநாட் டுலக வழக்கு. சொள் - சொட்டு. சொட்டுதல் = குழியக்
கொத்துதல். சொட்டு - சொட்டை - சொத்தை. சுல் - (சுன்) - சுனை = உள்ளிருந்து
ஊறும் நீர்நிலை. சுள்-சுர்-சுர. சுரத்தல் - துளைவழியாய் ஊறுதல். சுர - சுரங்கு -
சுரங்கம் = கள்வர் இடும் கன்னம், வெடிமருந்து வைக்கும் குழி, நிலவறை,
கீழ்நிலவழி, சுரங்கம்-suranga (Skt.). சுர் - சுரி.
சுரித்தல் = துளையிடுதல். சுரி = 1. துளை(திவா.), 2. ஏட்டுத்துளை, 3.ஏட்டில்
துளையிடுங் கருவி. சுர - சுரை = உட்டுளை, சிறு குழாய், குழிந்த இடம், முற்றி
உட்டுளையுள்ளதாகும் காய், சுரப்பு. சுர் - சுரு - சுருவம் = குழிந்த அகப்பை,
சுருவம்-sruva (Skt.). சுரு - சுருவை = அகப்பை. ஒ.நோ:
முழை - மூழை = அகப்பை. சுரு - சுருங்கு = அங்கணம் (சலதாரை). சுருங்கு - சுருங்கை
=அரசர் கரந்தோடித் தப்பும் கீழ்நிலவழி (சூடா.); 2. நீர் செல்லும் கரந்த படை. ''பெருங்குள மருங்கிற் சுருங்கைச் சிறுவழி'' (மணிமே. 12 : 79) 3. நுழைவாயில்
(பிங்.). சுருங்கை - surunga (Skt.) சொலி - சொரி.
சொரிதல் = உள்ளிருந்து விழுதல்.
|