|
அயற் சொற்களை வழங்குவதையே
குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு வகுப் பாருண்மையை அறியலாம். மணிலாக்கொட்டை என்பது
இன்று மல்லாக் கொட்டை என்று மருவி வழங்குகின்றது.
17. ''நம்முடைய தந்தமும்
முத்தும் மேனாட்டிற்குப் போனது போலக் கிரேக்க மொழிச் சொற்களும் தமிழில்
வந்துள்ளன.''
''நம்முடைய தந்தம்'' என்று
தந்தம் என்னும் பொருளோடு அச் சொல்லையும் நம்மோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றார்
பேராசிரியர். தந்தம் என்பது அச் சொல்லையும் குறிக்கும்; அச் சொல்லாலுணர்த்தப்
பெறும் பொருளையும் குறிக்கும். அவற்றுள், பொருள் நமது; சொல் நமதன்று.
தந்தம் என்பது ஆரியச் சொல். danta (வ), dentis (L.). தந்தத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் 'மருப்பு' ''அசனி
வேகமதன் மருப்பூசி யாக'' (சீவக.1121) மருப்பு = யானைக் கொம்பு
(பிங்.). ''அரிமந் திரம்புகுந்தா லானை மருப்பும்'' (நீதிவெண்பா,
2)
முத்து என்பது தூய
தமிழ்ச்சொல். ஆயினும், அது முக்தா என்னும் வடசொல்லின் திரிபாகச் சென்னைப்
பல்கலைக்கழகத் தமிழ் அகர முதலியிற் காட்டப்பட்டுள்ளது. பேராசிரியர் கருத்து யாதோ
அறிகிலம்.
18. ''சாட்டையைக் குறிக்கும்
'மத்திகை' என்பதும், தரைக்குள்ளே செல்லும் வழியைக் குறிக்கும் 'சுருங்கை' என்னும்
சொல்லும், 'கன்னல்' என்ற நாழிவட்டிலின் பெயரும், இரண்டரை நாழிகையைக் குறிக்கும்
''ஓரை' என்பதும், கிரேக்கச் சொற்களேயாம்.' ' இக்
கூற்றினால், பேராசிரியர் தம் தமிழறியாமையைத் தெள்ளத் தெளிவாகவும் முற்ற முடியவும்
காட்டுகின்றார். மேற்குறித்த நாற்சொல்லும் தூய தென்சொல்லே.
மத்திகை மத்திகை = குதிரைச்சாட்டை
அல்லது சம்மட்டி (horse whip)
''மத்திகை வளைஇய மறிந்துவீங்கு
செறிவுடை'' (முல்லைப்.59)
மொத்துதல் = அடித்தல். சாட்டையால்
அடித்தல், மொத்து - மொத்திகை - மத்திகை. ஒ-அ. ஒ.நோ : ஒட்டு -
அட்டு, கொம்பு - கம்பு, மொண்டை (மொந்தை) - மண்டை. சமட்டுதல் =
சாட்டையால் (சம்மட்டியால்) அடித்தல். சமட்டு - சமட்டி -
சம்மட்டி.
|