பரந்த
பாகுபாட்டில் ஒரு கூட்டுக் குடும்பமாய் அமைகின்ற, இந்திய
ஐரோப்பிய மொழித் தொகுதியின் தொடக்கநிலை தமிழாயும் முடிவுநிலை
சமற்கிருதமாயும் இருப்பதால், வடமொழியின் வரலாற்றை அல்லது இயல்பைத்
தெளிவாய் அறிதற்கு, தமிழின் பிறந்தகம் எதுவென்று முதற்கண் காணல்
இன்றியமையாததாம்.
தமிழ்
தோன்றிய இடம் தெற்கே முழுகிப் போன குமரிக் கண்டமே
(Lemuria) என்பதற்குச் சான்றுகளாவன:
|
(1) |
தமிழும்
அதனொடு தொடர்புள்ள திரவிட மொழிகளும் நாவலந்
தேயத்திற்குள்ளேயே வழங்குதலும்; தென்மொழி வடக்கே செல்லச்
செல்ல ஆரியப் பாங்கில் வலித்தும் உருத்தெரியாது சொற்றிரிந்தும்
ஒடுங்கியும் இலக்கிய மற்றும் இடையீடுபட்டும், தெற்கே வரவர
மெல்லொலி மிக்கும் திருந்தியும் விரிந்தும் இலக்கிய முற்றும்
செறிந்தும் இருத்தலும். |
|
|
|
|
(2) |
நாவலந்
தேயத்திற்கு வெளியே திரவிட மொழியின்மையும்,
மேலைமொழிகளிலுள்ள தென்சொற்கட் கெல்லாம் தமிழி லேயே
வேரிருத்தல். |
|
|
|
|
(3) |
தென்மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்த தமிழ், மலையாளம், கன்னடம்,
தெலுங்கு ஆகிய நாற்பெரு மொழிகளுள், முழுத் தூய்மையுள்ள
தமிழ் தென்னாட்டின் தென்கோடியில் வழங்குதல்.
தமிழ்நாட்டுள்ளும், தெற்கே செல்லச் செல்லத் தமிழ்
திருந்தியிருத்தலும், நெல்லை வட்டாரத் தமிழ் சொல் வளமும்
சொற்றூய்மையும் தொல்வடிவச் சொல்வழக்கும் குமரிநாட்டு
முறையொட்டிய தூய ஒலிப் பலுக்கமும் (உச்சரிப்பும்)
கொண்டிருத்தலும். |
|