|
|
"நல்லம்பர்
நல்ல குடியுடைத்து சித்தன்வாழ்(வு)
இல்லந் தொறுமூன் றெரியுடைத்து - நல்லரவப்
பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்" |
|
|
|
|
|
என்னும்
பழம்பாவும், பாண்டியனுக்குச் சிறப்பாகத் தமிழ் நாடன்
என்னும் பெயருண்மையும், 'திருத்தக் கல்லிற்குத் தெற்கிட்டுப்
பிறந்தவன்' என்னும் வழக்கும், இங்குக் கவனிக்கத் தக்கன. |
|
|
|
|
(5) |
தமிழ்,
வடநாட்டு மொழிகளிலும் தெலுங்கு முதலிய திரவிட
மொழிகளிலுமுள்ள வல்லொலிகளின்றி, சிறுவரும் முதியோரும்
நோயாளிகளும் பலுக்கக்கூடிய பெரும்பாலும் எளிய முப்பான்
ஒலிகளே கொண்டிருத்தலும்; எட்டும் பத்தும் பன்னிரண்டுமாக
மெய்யொலிகள் கொண்ட மொழிகள் ஆத்திரேலியாவிலும் அதனை
யடுத்த தீவுகளிலும் வழங்குதலும். |
|
|
|
|
(6) |
ஆத்திரேலியாவையும்
ஆப்பிரிக்காவையும் தன்னுடன்
இணைத்துக்கொண்டு ஏறத்தாழ ஈராயிரங் கல் தொலைவு தெற்கே
நீண்டிருந்த, குமரிக்கண்டத் தென்கோடிப் பஃறுளியாற்றங்கரை
மதுரையில் தலைக்கழகம் இருந் தமையும்; குமரிக்கண்டத்
தோற்றத்தின் எண்ணிற்கு மெட்டா நிலநூலியல் (Geological)
தொன்மையும், அதன் பெரும்பகுதி வரலாற்றுக் காலத்திற்கு முன்பே
முழுகிப் போனமையும். |
|
|
|
|
(7) |
தென்னைமரம்
ஆத்திரேலியத் தீவுகளினின்றே பிற தென் கிழக்குத்
தீவுகட்குக் கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப் படுவதும்,
குமரிக்கண்டத்தில் ஏழ்தெங்க நாடு இருந்தமை யும், தென் என்னும்
சொல் தென்னைமரத்தையும் தெற்குத் திசையையுங் குறித்தலும்.
தென்னுதல் = கோணுதல். தென்னியிருப்பது தென்னை. |
|
|
|
|
(8)
|
பண்டைத்
தமிழ்ச் செய்யுள்களிற் கூறப்பட்டுள்ள நீர்நாயும்,
உரையாசிரியராற் குறிக்கப் பெற்றுள்ள காரோதிமமும் (காரன்னம்),
ஆத்திரேலியாவிற்குத் தெற்கிலுள்ள தாசுமேனியத் (Tasmania)
தீவில் இன்று மிருத்தல். வணிகத்தால் வந்த இரண்டோர்
அயல்நாட்டு விலங்கு களும் நிலைத்திணை (தாவர)
வகைகளுந்தவிர, மற்றெல் லாக் கருப்பொருள்களும், அறுபெரும்
பொழுதும் ஐந்நில |