|
|
வகைகளுமாகிய
முதற்பொருளும், தென்னாட்டிற்குச் சிறப்பாக
உரியவையே பண்டைத் தமிழிலக்கியத்திற் கூறப்பட்டிருத்தல். |
|
|
|
|
(10) |
மக்களின்
இயற்கையான நாகரிக வளர்ச்சியையும் நிலையையும்
உணர்த்தும் ஐந்திணைப் பாகுபாடும், குறிஞ்சி மகளிர் தழையுடையும்,
நாடாட்சிக்கு முற்பட்ட ஊராட்சியும், அகப்பொருட் செய்யுள்களிற்
புலனெறி வழக்கமாகத் தொன்றுதொட்டுக் கூறப்பட்டு வருதலும்;
நிலையான குறிஞ்சி முல்லை மருத நெய்தலும் நிலையற்ற
பாலையுமான ஐந்திணை நிலப் பாகுபாடு, தமிழ்நாட்டிற் போல்
வேறெங்கும் அடுத்தடுத்து அமைந்திராமையும். |
|
|
|
|
(11) |
தமிழ்மக்கள்
பழங்கற்காலத்திலிருந்து தென்னாட்டிலேயே தொடர்ந்து
வாழ்ந்து வந்திருத்தலும், அவர்க்கு வந்தேறிக் கருத்தின்மையும். |
|
|
|
|
(12) |
தமிழர்
பிற நாட்டிலிருந்து வந்தாரென்பதற்குப் பண்டைத்
தமிழிலக்கியத்தில் ஒரு சான்றுமின்மை. |
|
|
|
|
(13) |
தென்னாடு,
தென்னர் (தென்னாட்டார்), தென்மொழி, தென்றமிழ்,
தென்னன் அல்லது தென்னவன் (பாண்டியன்), தென்கலை,
தென்னுரை என்னும் பெயர்கள், தமிழ் நாட்டையும் தமிழரையும்
தமிழையும் முதல் தமிழ் வேந்தனாகிய பாண்டியனையும்
தமிழ்க்கலையையும் குறித்துத் தொன்றுதொட்டு வழங்கி
வருகின்றமை. |
|
|
|
|
(14) |
குமரிக்கண்டத்
தென்பகுதி முழுகிப் போனபின் பண்டைத்
தமிழர் தம் இறந்த முன்னோரைத் தென்புலத்தார் என்றும்,
அவரிருக்கு மிடத்தைத் தென்புலம் அல்லது தென்னுலகு என்றும்,
கூற்றுவனைத் தென்புலக்கோன், தென்றிசைக் கிழவன், தென்றிசை
முதல்வன் என்றும் வழங்கிவந்தமை. |
|
(15) |
இலக்கணம்
இலக்கியம் சொல்வளம் முதலிய எல்லா வகையிலும்,
தென்னாட்டார்க்குச் சிறப்பாகவுரிய நாகரிகத் தைத் தமிழே காட்டி
நிற்றல். |
|
|
|
|
(16) |
தமிழே
தென்மொழியின் பிறந்தகத்தையும் அம் மொழி
வளர்ச்சியின் முந்துநிலைகளையும் காட்டி, தென்னோரின் மொழி
வரலாற்றையும் இன வரலாற்றையும் வரைதற் கேற்ற வரலாற்றுக்
குறிப்புகளைத் தாங்கி நிற்றல். தெற்கு வடக்குத் தெரியாதவன்,
தெற்கும் வடக்குமாய்த் திரிகின்றான், தென்வடல், தென்பல்லி,
வடபல்லி (அணிகள்) முதலிய வழக்குகளில் தென்றிசை முதலிற்
குறிக்கப் பெறுதல். |
|
|
|
|