பக்கம் எண் :

4வடமொழி வரலாறு

  (18) எண்டிசைத் தலைவருள் வடபால் மூவர் தவிர ஏனை யைவரும்,
குமரிநாட்டிற்குப் பொருத்தமானவாறே அமைந் திருத்தல். கிழக்கில்
சாலி (சாவக) நாட்டரசன் இந்திரன் (வேந்தன்) வழியினன் என்னப்
பெற்றமையையும், தென்கிழக்கில் அமைதி மாவாரியில் சில எரிமலை
களுண்மையையும், தென்மேற்கில் தென்னாப்பிரிக்க ரிருப்பதையும்,
குட (அரபிக்) கடல் குண (வங்காளக்) கடலினும் தொன்மை
யதாயிருப்பதையும் நோக்குக.
     
  (19) மேனாடுகளுள் முதன்முதல் நாகரிகம் பெற்றிருந்த எகிபது
குமரிநாட்டுத் தமிழரொடு வணிகவுறவு கொண்டிருந்தமை.
     
  (20) பிறமொழிச் சென்று வழங்கும் சொற்களும் இனமொழிச் சொற்களும்
உட்பட, தமிழ்ச்சொற்களெல்லாம், வேறெம் மொழியிலும் இல்லாவாறு
கொத்துக் கொத்தாகவும் குலங்குலமாகவும் தொடர்புகொண்டு
தென்னாட்டுத் தென்கோடியிலேயே தொன்றுதொட்டு வழங்கி வருதல்.

     எ - டு:

     உல் என்னும் முதலடி சொன்முதன் மெய்கள் ஆறொடு கூடி, குல்,
சுல், துல், நுல், புல், முல் என்னும் வழியடிகளைத் தோற்றுவிக்கும்.
அவற்றுள் குல் என்னும் வழியடி வளைவுக் கருத்தை அடிப்படையாகக்
கொண்டு பின்வருமாறு நூற்றுக்கணக் கான சொற்களைப் பிறப்பித்திருத்தல்
காண்க.

  குல்   குல் - குலவு. குலவுதல் = வளைதல். குலவு - குலாவு.
    குலுத்தம் = வளைந்த காயுள்ள கொள்.
குலுக்கை = உருண்டு நீண்ட குதிர்.
குல் - (கொல்) - கோல் = உருட்சி, திரட்சி. கோல்-கோலி=
சிற்றுருண்டை.
     
  குல்  -குள் - குளம் = வளைந்த நெற்றி, வெல்ல வுருண்டை.
    குளம்-குளகம் = வெல்ல வுருண்டை.
குளியம் = உருண்டை. குளிகை = உருண்ட மாத்திரை.
குளியம் - குழியம் = வளைதடி, விரை (வாசனை) யுருண்டை.
குள் - குழல். குழலுதல் = சுருளுதல்.
குள் - (குய்) - குயம் = வளைந்த அரிவாள்.
     
  குல்  -குர் - குரங்கு. குரங்குதல் = வளைதல். குரங்கு - குரங்கி =      வளைந்த
    அல்லது வட்டமான மதி.
குரவை = வட்டமாய் நின்று பாடியாடுங் கூத்து.