பக்கம் எண் :

முன்னுரை5

    குருள் = மயிர்ச்சுருள். குருளுதல் = சுருளுதல். குருகு = வளையல்,
வளைந்த கழுத்துள்ள நீர்ப் பறவைப் பொது, ஓதிமம் (அன்னம்).
குரகம் = நீர்வாழ் பறவைப் பொது.
குர் - குறு - குறங்கு = கொக்கி. குறங்கு - கறங்கு = காற்றாடி.
கறங்குதல் = சுழலுதல்.
     
  குறள்-குறழ். குறழ்தல் = குனிதல்.
    குறள் - குறண்டு. குறண்டுதல் = வளைதல், சுருளுதல்.
குறடு = வளைந்த அலகுள்ள பற்றுக் கருவி.
குறண்டல் = கூனல்.
குறு - கிறு. கிறுகிறுத்தல் = சுற்றுதல். கிறு - கிறுக்கு = தலைச்சுற்று,
கோட்டி (பைத்தியம்).
     
  குல் -குன் - குனி. குனிதல் = வளைதல். உடம்பு வளைதல்.
    குனி = வில்.
குனுகுதல் = சிறுத்து உடம்பு வளைதல்.
குன் - கூன் = வளைவு, முதுகு வளைவு.
கூன் - கூனல். கூன் - கூனி = வளைந்த சிற்றிறால்.
கூன் = கூனை = நான்மூலையும் கூனுள்ள நீர்ச்சால்.
     
  குள் -கூள் - கூளி = வளைந்த வாழைப்பழம்.
    கூள் - கூண்டு = தட்டிவளைவு, வண்டிக்கூண்டு போன்ற பறவைக் கூடு, விலங்குக் கூண்டு.
கூண்டு - கூடு = நெற்கூடு, கூண்டு, உறை, உள்ளீடின்மை.
குள் - கொள் = வளைந்த காயுள்ள பயற்றுவகை.
கொள் - கோள் = சுற்றிவரும் விண்மீன் (கிரகம்).
கோள் - கோளம் = வட்டம், உருண்டை. கோளம்-
கோளகை = வட்ட வடிவம், மண்டலிப் பாம்பு.
கோளம் = கோளகம் = (உருண்ட)மிளகு.
கோள் = கோளா = பொரித்த உருண்டைக் கறி.
கொள் - கொட்டு. கொட்டுதல் = கொள்கலத்தைச் சாய்த்து
உள்ளீட்டை வீழ்த்துதல்.
கொள் = கொட்பு = வளைவு, சுழற்சி, சுற்றுகை.
கொட்டு = வட்டமான நெற்கூடு, கொட்டு - கொட்டம்,
கொட்டில், கொட்டாரம். கொட்டில் = வட்டமான தொழு.
கொட்டு - கொட்டை = உருண்ட வடிவம், பஞ்சுச் சுருள், உருண்ட
தலையணை. கொட்டாரம் = வட்டமான களஞ்சியம்.