|
|
|
|
கொட்டு
- கொட்டம் = வட்டமான தொழு, நூற்குங்
கொட்டை. கொட்டகை = சாய்ப்புப் பந்தல்.
கொள் - கொட்கு.
கொட்குதல் = சுற்றுதல், திரிதல்.
கொட்கு - கொக்கு = வளைந்த கழுத்துள்ள நீர்ப்பறவை.
கொட்கி - கொக்கி = வளைந்த மாட்டி.
கொக்கை = கொக்கி.
கொக்கரை = வளைவு, வில், வலம்புரிச் சங்கு.
கொக்கட்டி = (குறுகி) வளைந்த பனங்கிழங்கு.
குள் - குண்டு = உருண்டை, உருட்சி.
குண்டன் = உருண்டு திரண்டவன்.
குண்டை = உருண்டு திரண்ட காளை.
குண்டடியன் - உருண்டு திரண்ட ஆண்சிறுத்தை.
குண்டான் - குண்டா - உருண்ட வடிவான கலம்.
குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம்,
காயம் (ஆகாயம்), ஆடவர் காதுவளையம். |
|
|
|
குண்டலம்
- குண்டலி = மூல நிலைக்கள (ஆதார) வட்டம். |
|
|
குண்டலி
- குண்டலினி = மூல நிலைக்களத்திலுள்ள பாம்பின்
வடிவமைந்த ஆற்றலி (சக்தி), மாமாயை. |
|
|
|
|
குண்டி
= உருண்ட புட்டம். குண்டு - கண்டு = நூற்பந்து. |
|
|
(குண்டகம்)
- கண்டகம் = வட்டமான மரக்கால்.
கண்டி = ஒரு கலம், ஓர் அளவு.
கண்டி - கண்டிகை = பதக்கம், தோட்கடகம்.
கண்டிகை - கடிகை = நாழிகை வட்டில், நாழிகை,
தோள் வளை, காப்பு. கடிகையாரம் - கடிகாரம்.
குள் - குண் - குணம் = குடம் (உருண்ட கலம்).
குணக்கு = வளைவு. குணக்குதல் = வளைத்தல்.
குணலை = நாணத்தால் உடல் வளைகை.
குணுக்கு = இளமகளிர் அணியும் கனத்த காது வளையம்.
குணம் - குடம், வளைவு, உருண்ட கலம், சக்கரக்குறடு.
குடந்தம் = வளைவு, வணக்கம்.
குடக்கு - குடக்கி = வளைவானது.
(குடகம்) - கடகம் = வட்டமான பெருநார்ப்பெட்டி.
கடகம் - கடாகம் = வானவட்டம்.
குடலை = உருண்டு நீண்ட பூக்கூடை. |
|
|
|
|