|
மறைவிடம்
என்னும் பொருளில் இருக்குவேதத்திலும், அக்குள்
என்னும் பொருளில் அதர்வ வேதத்திலும், க்ஷ என்னும் சொல்
ஆளப்பெற்றிருப்பதாக மா. வி. அ. கூறும்.
கட்சி - கக்ஷ
கட்சி
= காடு. கள் - கடு - காடு. கள் + சி = கட்சி.
| "கலவ
மஞ்ஞை கட்சியிற் றளரினும்" |
(மலைபடு.
235)
|
கட்டில் - கட்வா
(kh)
கட்டு
- கட்டில்.
கட்டை - காஷ்ட
கள்
- கட்டு - கட்டை = திரண்ட மரத்துண்டு, திரண்ட விறகு.
வடமொழியில்
திரட்சி என்னும் சிறப்புப் பொருளில்லை.
கடகம் - கடக ()
குடா=வளைவு.
குடங்குதல்=வளைதல். குடந்தம் = வணக்கம்.
குட-குடம்
- (குடகம்) - கடகம் = வளையல், தோள்வளை, வட்டம்,
வட்டமான பெரு நார்ப்பெட்டி, நண்டு, நகர் சூழ்ந்த மதில், மதில் சூழ்ந்த
ஒட்டரநாட்டுத் தலைநகர்.
கடகன் - கடக (gh,
t)
கடத்தல்
= மிஞ்சுதல், தேர்தல், வெல்லுதல். கட - கடகன்
= கடந்தவன், தேர்ந்தவன்.
கடம்பு - கதம்ப
கடம்பு
- கடம்பம் - கதம்ப (வ.).
அம்மீறு
பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது. அதோடு,
கடம்பம் என்னும் மரப்பெயரும் கதம்பம் என்னும் கலவைப் பெயரும்
ஒன்றாக மயக்கப்பட்டுள்ளன.
கடாகம் - கடாஹ
கடகம்
- கடாகம் = வட்டமான கொப்பரை, பெருவெளிக் கோளகை.
கடி - காத் (khd)
- இ.வே.
கடித்தல்
= பல்லால் வெட்டுதல், கடித்துத் தின்னுதல்.
கடிகை1 -
கட, கடீ, கடிகா (gh,)
குள்-குண்டு=குழி,
ஆழம். குண்டு - குண்டான் = குழிந்த அல்லது
குண்டான கலம். குண்டான் - குண்டா.
|