பக்கம் எண் :

102வடமொழி வரலாறு

     குண்டு - குண்டிகை - குடிகை - குடுக்கை - குடுவை.

     குடிகை = நீர்க்கலம் (கமண்டலம்).    

"அரும்புனற் குடிகை மீது"
(கந்தபு. காவிரி. 49)

     குடிகை - கடிகை = நீர்க்கலம், நாழிகை வட்டில், நாழிகை மங்கல
     நாழிகை குறிக்கும் கணியன், மங்கலப் பாடகன்.

     கடிகை - கடிஞை. வடவர் காட்டும் கட (gh) என்னும் மூலம் குடம்
     என் னும் தென்சொல்லின் திரிபே.

     கடிகை + ஆரம் = கடிகையாரம் - கடிகாரம்.

     ஆரம் என்பது ஓர் ஈறு.

     ஒ.நோ: கூடாரம், கொட்டாரம், வட்டாரம்.

     கடீயந்திர, கடிகா யந்திர என்னும் வடசொற் புணர்ப் பினின்று
கடிகாரம் என்னும் தென்சொல் வந்ததன்று.

கடிகை2 - கட, கடா (gh,)

     குடி = குலம், கூட்டம். குடி = குடிகை - கடிகை = சிறு கூட்டம்,
     ஊரவை.

     இங்குக் கை என்பது சிறுமைப்பொருட் பின்னொட்டு (dim. suf.)

     வடவர் காட்டும் கட் (பா) என்னும் மூலம் தொடர்பற்ற பல்வேறு
பொருள்கொண்ட சொல். கூடுதல் என்னும் பொருளில் அது குட என்னும்
தென்சொற் றிரிபாகும்.

     குல் - குள் - குழு - குழ - குட - குடம் = திரட்சி. குடத்தல்
     = கூடுதல்,      திரளுதல்.

கடு1 - கட் (d.d.)

     கடு = வன்மை (கடினம்), கடுமை. கட்டெனல் = வண்மையா யிருத்தல்.      கடுக்கெனல் = வன்மையாயிருத்தல்.

கடு2 - கடு ()

     கள் = முள். கள்ளி = முட்செடி. கள் - கடு = முள் (திவா.), கார்ப்பு,      கைப்பு, மிகுதி, வெம்மை, கொடுமை.

     கடு - கடி = கூர்மை, மிகுதி, கார்ப்பு.

     வடமொழியில் மூலமில்லை. க்ருத் (வெட்டு) என்னும் வடசொல் கத்து (வெட்டு) என்னும் தென்சொற் றிரிபாதலின், மூலமாகாது.