பக்கம் எண் :

மொழியதிகாரம்103

கடுகு - கடுக () - இ.வே.

     கடு - கடுகு = காரமுள்ள பொருள்.

     'கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' என்பது பழமொழி.

     கடுகு - கடுகம்.

     அம்மீறு பெற்ற வடிவே ஈறுகெட்டு வடமொழியிலுள்ளது.

கடைகால் - கடீ, கடகா (gh, ()

     கடைகால் - கடகால் (கொச்சை) = நீரிறைக்கும் வாளி, நீர்ச்சால்.

கண் - கண்(g)

     கள் - கண் = 1. கரிய பார்வையுறுப்பு. 2. அகக் கண்ணாகிய மனம்.
     3 . அறிவு, ஓதி (ஞானம்).

"கள்ளொற்றிக் கண்சாய் பவர்"
(குறள். 927)

     கண்ணுதல் அகக் கண்ணாற் காணுதல், கருதுதல், மதித்தல்,
     அளவிடுதல்.

     கண் - கண்ணியம் = மதிப்பு.

கண்ணியம் - கண்ய(g)

     கண்டம் - கண்ட (nt) = முள்.

     கள் - முள். கள் - கள்ளி. ஒ.நோ : முள் - முள்ளி. கள் -கண்டு =
     கண்டங்கத்தரி (முட்கத்தரி).

     கண்டு - கண்டம் = கள்ளி, கண்டங்கத்தரி, எழுத்தாணி, வாள்.
     வடமொழியில் மூலமில்லை.

கண்டகம் - கண்டக (≺—)

     கள் - கண்டு - கண்டகம் = முள், நீர்முள்ளி, உடைவாள், வாள்,

     ஒ.நோ: முள் - முண்டு - முண்டகம் = முள், முள்ளி, முள்தூறு,
     தாழை, கருக்குவாய்ச்சி.

கண்டகி - கண்டகி, கண்டகின்(≺—)

     கண்டகம் - கண்டகி = தாழை, மூங்கில், இலந்தை, முதுகெலும்பு.

     கண்டு - கண்டல் = தாழை, முள்ளி, நீர்முள்ளி.

     வடமொழியிலும் கண்டக, கண்டகி என்னும் சொற்கள் முள்ளையும்
முட்செடிகளையும் முட்போன்ற பொருள்களையும் குறிக்கும். கண்டங்கத்தரி
அதிற் கண்டகாரீ என வழங்கும்.