பக்கம் எண் :

104வடமொழி வரலாறு

கண்டம் - கண்ட(kh)

     கண்டு = துண்டு, கட்டி, சருக்கரைக் கட்டி, நூற்பந்து.

     கண்டு - கண்டம் = துண்டு, மாநிலப்பிரிவு.

     ஒ.நோ : துண்டு - துண்டம். கண்டு - கண்டிகை = நிலப்பிரிவு.

     உப்புக்கண்டம், கண்டங்கண்டமாய் நறுக்குதல் என்பன உலக வழக்கு.

     அம் என்பது இங்குப் பெருமைப்பொருட் பின்னொட்டு.

கண்டி - கண்ட் (kh)

     கண்டு - துண்டி. ஒ.நோ: துண்டு - துண்டி.

     கண்டித்தல் = துண்டுதுண்டாய் வெட்டுதல், வெட்டுவது
போற் கடிந்து கூறுதல், முகத்தை முறித்தல் வெட்டிப்பேசுதல் என்னும்
வழக்குகளை நோக்குக.

     கண்டி - கடி - கடிதல் = கழறுதல். கண்டி - கண்டிப்பு.

கண்டிதம் - கண்டித (kh)

கண்டி - கண்டிதம் = கண்டிப்பு.

கண்டனம் - கண்டன (kh)

     கண்டி + அனம் = கண்டனம். ஒ.நோ : முண்டி - முண்டனம்.

கண்டை - கண்டா (gh, ≺—)

     குண்டு - குண்டலம் = வட்டம், வளையம். குண்டு - குண்டை =
     உருண்டு திரண்ட காளை.

     குண்டை-கண்டை = வட்டமான அல்லது திரண்ட மணி.

கணக்கன் - கணக்க (g). வே.

     கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல், ஒத்தல். கள்ள=போல.

"கள்ளக் கடுப்ப ஆங்கவை எனாஅ"
(தொல். 1232)

     கள் - கள - கண. கணத்தல் = கூடுதல், ஒத்தல்.

     கள் - களம் = கூட்டம், அவை. களம் - கணம் = கூட்டம்.

     கணவன் = மனைவியொடு கூடுபவன்.

     கண - கணக்கு = கூட்டு, மொத்தஅளவு, அளவு. கணக்கு
என்னுஞ் சொல் முதன்முதற் கூட்டற் கணக்கையே குறித்தது. அதற்குக்
கணக்கில்லை, கணக்கு வழக்கில்லாமல், அது கணக்கன்று என்பவற்றில்
கணக்கு என்பது அளவு அல்லது கூட்டு என்றே பொருள்படுதல் காண்க.