பக்கம் எண் :

மொழியதிகாரம்105

     கணக்க = போல. குரங்கு கணக்க ஓடுகிறான் என்னும் உலக
வழக்கை நோக்குக. அந்தக் கணக்கில் (கணக்காய்) = அதைப் போல.

     கணக்கு - கணக்கன் = கணக்குப் பார்ப்பவன், கணக்கத்
தொழிற் குலத்தான்.

     வடவர் காட்டும் கண் (ப) என்னும் மூலம் இதற்குரியதன்று.

கணம் - கண (g) இ.வே.

     இது மேல் விளக்கப்பெற்றது.

கணி - கண் (g)

      கண் - கணி. கணித்தல் = புறக்கண்ணாற் காணுதல், அகக்
கண்ணாற் காணுதல், மதித்தல், அளவிடுதல், கணக்கிட்டு வகுத்தல்.

     கடைக்கணித்தல், சிறக்கணித்தல், புறக்கணித்தல் என்பன
புறக்கண்ணாற் காண்டலைக் குறித்தல் காண்க.

கணிதம் - கணித (g)

     கணி - கணிதம் = கணிப்பு, பல்வகைக் கணக்கு.

     கணிதம் - கணிசம் = மதிப்பு (உத்தேசம்). கணிசம் என்னும்
வடிவம் வடமொழியில் இல்லை.

     குழம்பிற்குக் கணிசமாய் உப்புப் போடு என்னும் வழக்கை நோக்குக.

     கணிதம் - கணிதன் = கணியன், கணக்கறிஞன்.

கணி - கணி (g)

     கணி = கணிப்பவன், கணியன் (சோதிடன்).

     கணிகன், கணியன், கணிவன் என்னும் வடிவங்கள் வடமொழியில்
இல்லை.

கணிகை - கணிகா (g)

     கணி - கணிகை = தாளங்கணித் தாடுபவள்.

     கத்தரி - கர்த்தரி

     கத்துதல் = வெட்டுதல். இவ் வினை பிற்காலத்து வழக்கற்றது.

     கத்து - கத்தி = அறுக்கும் அல்லது வெட்டுங்கருவி.

     ஒ.நோ : கொத்து - கொத்தி, வெட்டு - வெட்டி.

     கத்து + அரி = கத்தரி. கத்தரித்தல் = வெட்டி நறுக்குதல்.

     அரிதல்=சிறிதாய் நறுக்குதல், அரித்தல் =அராவித்தேய்த்தல்.

     கதக்குக் கதக்கென்று வெட்டுதல் என்பது உலகவழக்கு.