|
கத்தரிகை - கர்த்தரிகா
கதம்பம் - கதம்ப
கல
- கலம்பு - கலம்பம் - கதம்பம் = பல்வேறுவகை மலர்கள்
கலந்த மாலை.
ல
- த, போலித்திரிபு. ஒ.நோ: சலங்கை - - சதங்கை.
வடவர்
காட்டும் கத் என்றும் மூலம் கல்லென்னும் தென் சொல்
வேர்த்திரிபே.
கதலி - கதலி,
கதலீ
கதலி
= சிறுவாழைப்பழம். கதலி - கசலி = மீன்குஞ்சு.
இச்
சொல் குதலை என்பதனொடு தொடர்புடையது.
மிக
இனிக்கும் சிறுவாழைப் பழவகை தேங்கதலி எனப் பெறும்.
வடசொல்
சிறுமை என்னும் சிறப்புப் பொருளிழந்து. பொதுவாய்
எல்லா வாழைப்பழ வகைகளையும் குறிக்கும்.
கதை - கதா (th)
கத்துதல்
= உரக்கச் சொல்லுதல்.
கத்து
- கதை. ஒ.நோ : நச்சு - நசை. நொடித்தல் = சொல்லுதல்.
நொடி = கதை.
வடசொன்
மூலம் கத் என்பதே. கத்து-கத்.
கந்தன் - ஸ்கந்த
(dh)
கந்து
= தூண். பற்றுக்கோடு. கந்து - கந்தன் = தூணிற்
பொறிக்கப்பட்டவன் அல்லது பற்றுக்கோடானவன், முருகன்.
கந்துகம் - கந்துக
கள்
- கண்டு = நூற்பந்து. கண்டு - கந்து - கந்துகம் = பந்து.
இனி,
கும் - கம் - கந்து - கந்துகம் என்றுமாம்.
கந்தை - கந்தா
(nt)
த்து
- கந்து - கந்தல், கந்தை. கொந்து - கொந்தல் - கந்தல் (?)
கப்பரை - கர்ப்பர
கொப்பரை
- கப்பரை.
|