|
கம் - க (நீர்)
அம்
- கம் = நீர்.
கம்பலம் - கம்பல
கம்பலம்
- கம்பளம் - கம்பளி.
கமுகு - க்ரமுக
கரு - கர்ப (g,
bh) - இ.வே.
குருத்தல்
= தோன்றுதல். குரு - கரு - (கருப்பு) - கருப்பம்.
கரு
= சூல், பீள், முட்டை, சேய், குட்டி.
வடமொழியாளர்
க்ரூ (விளி) என்றும் grabh = grah (பற்று) என்றும்
மூலங் காட்டுவது பொருந்தாது.
கருள் - க்ருஷ்
கள்
- கர் - கரு - கருள் = இருள் (பிங்.), கருமை.
| "கருடரு
கண்டத்து......கைலையார்" |
(தேவா.
337 : 4)
|
கருள்
- க்ருஷ் - க்ருஷ்ண (இ.வே.) = கருமை.
க்ருஷ்ணபக்ஷ
= கரும்பக்கம், தேய்பிறை. க்ருஷ்ண ஸர்ப்ப
= கரும்பாம்பு.
கரை - க்ரு (g)
கரைதல்
= அழைத்தல், சொல்லுதல், விளம்புதல்.
கல்1
- கல்
கல்லெனல்
=ஆரவாரித்தல். கல் - கலி. கலித்தல் = ஒலித்தல்.
கலி = ஒலி (தொல்.
832).
கல்2
- கன் (kh) - இ.வே.
கல்லுதல்
= தோண்டுதல். கல் - கன் - கன்னம் = சுவரைத்
துளைத்தல், சுவர்த்துளை, துளைக்குங்கோல்.
கன்
(வ.) = தோண்டு.
கன்னம்
(ம.), கன்னமு(தெ.), கன்ன(க.) என்பன சுவர்த்துளை யைக்
குறிக்கும்.
கலகம்-கலஹ
கலத்தல்
= பொருந்துதல், பொருந்திப் போர் செய்தல்.
|