ஒ.நோ
: பொரு - போர். சமம் - சமர்.
கைகலத்தல்=சண்டையிடுதல்.
கல-கலாம் = போர், கலகம்.
கல-கலவு
- கலகு - கலகம் = கூட்டச் சண்டை. கலகு - கலகி.
கலகித்தல்
= கலகஞ்செய்தல்.
வடமொழியில்
மூலமில்லை.
கலவம் - கலாப
கல
- கலவு. கலவுதல் = கலத்தல்.
கலவு
- கலவம் = 1. கற்றையான மயில்தோகை.
"கலவம்
விரித்த மஞ்ஞை" (பொருந. 212).
2.
மயில் (சினையாகு பெயர்) .
"கலவஞ்சேர்
கழிக்கானல்" |
(தேவா.
532: 4)
|
கலவு
- கலாவு. கலாவுதல் = கலத்தல். கலவம் - கலாவம்= மயில்
தோகை.
"கலிமயிற்
கலாவம்" |
(புறம்.
146: 8) |
மயில்
தென்னாட்டுக் குறிஞ்சிநிலத்திற்குரிய பறவை; குறிஞ்சித்
தெய்வமாகிய முருகன் ஊர்தி.
வடமொழியிற்
கலா (சிறுபகுதி) + ஆப் (கொள், to obtain) என்று
பிரித்து, பல பகுதிகளை ஒன்றுசேர்ப்பது கற்றை ("that which holds single
parts together, a bundle") என்று காரணம் கூறுவது, வட்டஞ்சுற்றி
வலிந்தும் நலிந்தும் பொருள்கொள்ளுவதா யிருத்தல் காண்க.
கலுழன் - கருட (ப)
- இ. வே.
கல்
- கலுழ். கலுழ்தல் = கலத்தல். கலுழ் - கலுழன் = வெண்மையும்
செம்மையும் கலந்த பருந்தினம்.
"கலுழன்மேல்
வந்து தோன்றினான்" |
(கம்பரா.
திருவவ. 13)
|
மொழியார்
க்ரு (ப) என்பதை மூலமாகக் காட்டி, எல்லா வற்றையும்
விழுங்குவது என்று பொருட்காரணங் கூறுவர்.
கலுழம் - கலுஷ
கலுழ்தல்
= கலங்குதல். கலுழ் = நீர்க்கலக்கம்.
"கலுழ்
தேறி" (கலித். 31.)
|