பக்கம் எண் :

120வடமொழி வரலாறு

குடங்கர் - குடங்கக (t) = குடிசை.

     குடம்-குடங்கு-குடங்கர் = 1. குடம். 2. வளைந்த அல்லது வட்டமான
     குடிசை.

     "குடங்கருட் பாம்போ டுடனுறைந் தற்று" (குறள். 890)

     குடங்குதல் = வளைதல்.

குடம்1 - குட (வஞு)

      குடம்=நீர்க்குடம். வ. குட = நீர்க்குடம். குடம் - வ. கட(gh,-).

குடம்2 - குட (g)

     குளம் - குடம் = வெல்ல வுருண்டை.

     வ. குட (ப) = வெல்லம்.

குடல் - குத (g) - வே.

     குழல் - குடல் = குழல்போன்ற உறுப்பு.

     வ. குத - குடல்.

குடி1 - குடி(t) = வளைவு.

     குட - குடி = வளைவு. வ. குடி - குடீ = வளைவு.

குடி2 - குடி ().

     குடி=இல், குடியிருப்பு. குடியிருத்தல் = இல்லிருத்தல், நிலை யாகத்
     தங்குதல். குடிக்கூலி = வீட்டுவாடகை.

     குடியானவன் = இல்வாழ்வான், உழவன்.

     குடிகள் = நாட்டிற் குடியிருக்கும் மக்கள்.

     வ. குடி = குடிசை, கொட்டகை, கூடம், கடை.

     குடீ = குடிசை. கொட்டகை, வீடு, கூடம், கடை.

     முதற்காலத்தில் வீடுகளெல்லாம் வட்டமாய்க் கட்டப் பட்டிருந்ததால்,
வீடு குடியெனப்பட்டது.

     ஒ.நோ : வளவு = வீடு 

"வளவிற் கமைந்த வாயிற் றாகி"
(பெருங்.இலாவாண. 3: 77)

குடி3 - குட் (d) = உண்.

குடிசை - குடீகா (t) = சிறுவீடு.

     குடி - குடிகை = சிறுவீடு, சிறுகோயில், இலைக்குடில். கை என்பது
     ஒரு சிறுமைப்பொருட் பின்னொட்டு.