வடவர்
மூலமாகக் காட்டும் ஜீர், ஜீரு என்பவையெல்லாம் கிழ
என்பதன் திரிபே.
குக்கல் - குக்குர
குள்
- (குட்கு) - குக்கு. குக்குதல் = குறுகுதல், ஒடுங்குதல், சிறுத்தல்.
குக்கு
- குக்கல் = சிறுத்த நாய், குள்ளநாய்.
வடமொழியில்
மூலமில்லாதிருப்பதுடன், குள்ளநாய் என்னும்
சிறப்புப் பொருளிழந்து நாயென்னும் பொதுப் பொருளே வடசொல்
தருகின்றது.
குகை - குஹா (g,h)
குழை-குகை.
ஒ.நோ: முழை-முகை. வ. மூலம் குஹ் (மறைத்தல்).
குத்து - குச்ச (g)
குத்து
- கொத்து. குத்து - குச்சு - குச்சம்.
குத்ஸ
= குச்ச (g) = குத்துச்செடி, கொத்து.
வடவர்
காட்டும் குத் (gudh) என்னும் மூலம் சுற்றுதல், மூடுதல்
என்றே பொருள் தருதலாற் பொருந்தாது.
குச்சு - கூர்ச்ச
குச்சு
= வண்ண ஓியன் தூரிகை (painter's brush), பாவாற்றி.
குட்டம் - குஷ்ட
குள்
- குட்டு - குட்டம் = குட்டை, குட்டி.
குட்டம்
= 1. சீர் குறைந்து குறுகிய அடி.
"குட்டமும்
நேரடிக் கொட்டின என்ப" |
(தொல்.
1372)
|
2.
விரல்களும் மூக்கும் அழுகிக் குட்டையாகும் நோய்.
வடவர்
கு + ஸ்த என்று பிரித்து, குறைந்து நிற்பது என்று
பொருட் காரணங் கூறுவர். அதிலும் கு என்பது தென்சொல்லே. குள்-கு.
ஒ.நோ:
நல் - ந, அல் - அ.
குட்டை
= வெண்குட்டநோய்.
குட - குட் = வளை
(to bend)
குட
= வளைந்த. குடம் = வளைவு.
|