வேனிற்காலத்திற்குரிய
கொப்புளநோய் காளியால் வருவதாகக்
கருதப்பட்டதினால். அது அம்மை யெனப்பட்டது. போர் வெற்றி
நோக்கியும் அம்மைநோய்பற்றியுங் காளி நாள டைவில் ஐந்திணைக்கும்
பொதுத் தெய்வமானாள்.
ஆரியர்
வருமுன்பு தமிழர் பனிமலைவரை சென்று
பரவியிருந்ததினால், வங்கத்திற் காளிக்கோட்டம் ஏற்பட்டது.
காளி
ஆரியத் தெய்வ மன்மையின் வேதத்தில் இடம்பெற வில்லை.
ஆரியர் சிந்துவெளியினின்று கிழக்கு நோக்கிச் சென்று
வங்கத்தையடைந்த பின்னரே, காளிவணக்கத்தை மேற்கொண்டனர்.
குமரிக்கண்டத்தில்
தோன்றிய, குமரி, கன்னி என்னும் மலைப்
பெயரும் ஆற்றுப் பெயரும் காளியின் பெயர்களே.
கயற்கண்ணியை
அங்கயற்கண்ணி என்றதுபோல், காளியை யும்
பிற்காலத்தில் அங்காளி, அங்காளம்மை என்றழைத்தனர். அங்கம்மா
என்பது அங்காளம்மை என்பதன் சிதைவாகும்.
கானம்-கானன
கடு-காடு-கா-கான்
- கானம், கானகம். கான் - காடு (திவா.)
கானம்
= காடு. "கானக் கோழியும்" (சிலப். 10: 116).
கானகம்=
1.காடு. "கானகத்தே நடக்குந் திருவடி" (திருவாச.40:8)
2.
மலங்காடு. "கானக நாடன்" (ஐங். 217).
வடவர்
கன் என்னும் பொருந்தாச் சொல்லை மூலமாகக்
காட்டுவதை மா. வி. அகரமுதலி ஒப்புக்கொள்ளவில்லை.
கிண்கிணி - கிங்கிணி
கிண்கிண்
- கிண்கிணி.
"தவளை
வாய பொலஞ்செய் கிண்கிணி" |
(குறுந்.
148)
|
கிண்கிணி
- கிங்கிணி = 1. பாத சதங்கை (பிங்.). 2. சதங்கை
யரைக்கோவை.
"மாணிக்கக்
கிங்கிணி தன்னரை யாட" |
(திவ்.பெரியாழ்.1:8:2)
|
கிட்டம் - கிட்ட
கிட்டு
- கிட்டி - கிட்டம். கிட்டித்தல் = இறுக்குதல். கிட்டம்
= இறுகிய கட்டி, இறுகிய வண்டல், அதுபோன்ற இருப்புத்துரு.
கிழம் - ஜரஸ்
(இ. வே.)
தமிழ்
|
கிரேக்கம்
|
வேதமொழி |
|
|
|
கிழம்
|
கெரோன்
(g) |
ஜரஸ் |
|