| "ஆழ்ந்த
குழும்பிற் றிருமணி கிளர" |
(மதுரைக். 273)
|
இகரம்
உகரமாயது உயிரிசைவு மாற்றம் (Harmonic sequence of
vowels).
குடும்பு
= குடும்பம், உறவினர் கூட்டம், ஊர்ப்பிரிவு (ward).
குடும்பன்
= குடும்பத்தலைவன், ஊர்த்தலைவன், பள்ளர் தலைவன்.
குடும்பு
- குடும்பம் = 1. மனைவி.
| "பாகத்தார்
குடும்ப நீக்கி" |
(சீவக.
1437)
|
2.
கணவன் மனைவி மக்கள் கூட்டம்.
| "குடும்பத்தைக்
குற்ற மறைப்பான்" |
(குறள்.
1029)
|
3.
உறவினர் கூட்டம்.
| "குடும்பந்
தாங்குங் குடிப்பிறந் தாரினே" |
(கம்பரா.சேதுப.53)
|
காய்க்
குலையைக் குறிக்கும் குடும்பு என்னுஞ் சொல் குழும்பு
என்பதன் திரிபாகும்.
குடும்பு
என்னும் வடிவம் வடமொழியில் இல்லை.
குடும்பி
- குடும்பின் (t)
குடும்பம்
- குடும்பி = பெருங் குடும்பத்தலைவன்.
குண்டம் - குண்ட
= குழி
குள்-குண்டு
= குழி, சிறுகுட்டை. குண்டுங் குழியும் என்பது உலக
வழக்கு.
குண்டு
- குண்டம் = குழி, குட்டை, பானை, குடுவை.
வடமொழியிற்
குண்டு என்னும் வடிவமும் இல்லை; குள் என்னும்
மூலமும் இல்லை.
குண்டலம் - குண்டல
குள்-குண்டு
= உருண்டை. குண்டு - குண்டலம் = வட்டம், சுன்னம்,
வானவட்டம், ஆடவர் காது வளையம்.
| "குண்டல
மொருபுடை குலாவி வில்லிட" |
(சீவக.
1009)
|
குண்டலி - குண்டலின்
குண்டலம்
- குண்டலி = மூல நிலைக்கள வட்டம், தூய மாயை.
|