|
இதன்
விளக்கத்தை என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் காண்க.
குண்டிகை - குண்டிகா = துறவியின் நீர்க்கலம்.
குண்டு-குண்டிகை
= 1. குண்டான நீர்க்கலம்.
"நான்முகன்
குண்டிகை நீர்பெய்து" (திவ். இயற். நான். 9).
2.
குடுக்கை. "பருத்திக் குண்டிகை" (நன். 31).
குண்டிகை
- குடிகை = நீர்க்கலம்.
| "அரும்புனற்
குடிகை மீது" |
(கந்தபு.
காவிரி. 49) |
குடிகை
- குடுக்கை - குடுவை.
குணம் - குண (g)
கொள்ளுதல்
= கொண்டிருத்தல், உடையனாயிருத்தல்.
கொள்
- கொள்கை = இயல்பு.
| "கொம்பினின்று
நுடங்குறு கொள்கையார்" |
(கம்பரா.
கிளை. 10)
|
கொள்
- கோள் = தன்மை.
| "யாக்கைக்கோ
ளெண்ணார்" |
(நாலடி.18)
|
கொள்
- (கொண்) - (கொணம்) - குணம் = கொண்ட தன்மை, தன்மை.
வடமொழியிற்
கிரஹ் (பற்று) என்னுஞ் சொல்லை மூலமாகக்
காட்டுவர். கிரஹ் என்னும் சொல்லினும் கொள் என்னும் சொல்லே
வடிவிலும் பொருளிலும் பொருத்தமா யிருத்தலையும், கொள் என்பதும்
பற்று என்று பொருள்படுதலையும் நோக்குக.
குத்து - குட் ()
- வே.
குட்
= குத்து, to pound.
குத்து - சத் (ஸ)
- உட்கார்.
குத்த
வை = புட்டத்தை நிலத்திற் குத்தும்படி வை, குந்தியிரு
(நெல்லை வழக்கு).
குண்டி
குத்து = குந்து (நாகை வழக்கு).
குத்து
- குந்து, to squat.
குதி - கூர்த் =
குதி.
|