பக்கம் எண் :

124வடமொழி வரலாறு

குந்தம் - குந்த (nt) = வேல், ஈட்டி.

     குந்து - குந்து - குந்தம் = 1.குத்துக்கோல்.

     "பூந்தலைக் குந்தங் குத்தி" (முல்லைப். 41). 2. வேல்

     "குந்த மலியும் புரவியான்" (பு. வெ. 4 : 7).

     3. எறிவேல் (javelin)

     "வைவா ளிருஞ்சிலை குந்தம்" (சீவக. 1678).

குந்தாலம் - குத்தால (dd)

     குந்தாலம் = குத்தித் தோண்டுங் கருவிவகை.

     குந்தாலம்-குந்தாலி "குந்தாலிக்கும் பாரை வலிது" (திருமந்.2909).

     ம. குந்தாலி.

     குந்தாலம் - கூந்தாலம். குந்தாலி - கூந்தாலி.

குப்பாயம் - கூர்ப்பாஸ = கவசம், சட்டை.

     குப்பி = குடுவை, மாட்டுக்கொம்புப் பூண்.

     குப்பா = தூரிவலையிற் சேர்த்துள்ள பை.

     குப்பாயம் = சட்டை.

     'வெங்க ணோக்கிற் குப்பாய மிலேச்சனை' (சீவக. 431).

     குப்பாயம் - குப்பாசம் = 1. மெய்ச்சட்டை.

     "குப்பாச மிட்டுக் குறுக்கே கவசமிட்டு" (தமிழ்நா. 192).

     2. பாம்புச் சட்டை (சி. சி. பாயி. ப.42).

கும்பம் - கும்ப (bh) - இ.வே.

     கும்முதல் = குவிதல். கும் - குமி - குமிழ் - குமிழி.

     கும்-கும்பு - கூம்பு. கூம்புதல் - குவிதல். கும்புதல் = குவிதல்.

     கும்பு-கும்பம் = குடம், தேர் முடி, யானைத் தலைக் குவவு, கட்டடக்
     குவிமுகடு (dome).

     கும்பச்சுரை = குவிந்த சுரைக்காய்.

     கும்பம் - கும்பா = கீழ்நோக்கிக் குவிந்த உண்கலம்.

     கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்தல்.

     வடவர் காட்டும் கும்ப் (b, bh) என்னும் மூலம் கும்பு என்பதன்
சிதைவே. ஆயின், அவர் கொள்ளும் பொருள் கவிதல்; தென்னவர்
கொள்ளும் பொருள் குவிதல். முன்னது கீழ்நோக்கியதென்றும், பின்னது
மேல்நோக்கியதென்றும் வேறுபாடறிக.