|
பருமையும்
கனமுமே வேதத்திற் கொள்ளப்பட்ட பொருள்கள்.
பிறவெல்லாம் பிந்தினவே.
குருந்தம் - குருவிந்த
= மாணிக்க வகை
குரு
= சிந்துரம். குருவெறும்பு = செவ்வெறும்பு.
குரு
- குருதி = அரத்தம், சிவப்பு, செவ்வாய்.
குருதிக்
காந்தள் = செங்காந்தள் (சீவக. 1651).
குரு
- குருந்து = மாணிக்கவகை. குருந்து - குருந்தம்.
குருள் - குருல =
மயிர்ச்சுருள்
குள்
- - குர் - குரு - குருள். குருளுதல் = சுருளுதல்.
"குருண்ட
வார்குழல்" (திருவிசை. திருவாலி. 1:3).
குருள்
= மயிர்ச்சுருள், பெண்டிர் தலைமயிர்.
குரை - குர்
= ஒலி
குரைத்தல்
= ஒலித்தல், ஆரவாரித்தல்.
குலம் - குல
குல்
- குல - குலவு. குலவுதல் = கூடுதல்.
குல்
- குலம் = கூட்டம், குடும்பம், வகுப்பு, குலப்பிரிவு, இனம்.
வடமொழி
மூலமும் குல் என்பதே.
குவம் - குவ =
ஆம்பல்
குவி-குவம்.
ஒ.நோ : அம்-அம்பு-அம்பல்-ஆம்பல். கும் - குமுதம்.
குவளை - குவல
குவளை
= 1. கருங்குவளை.
| "குவளை...கொடிச்சி
கண்போல் மலர்தலும்" |
(ஐங்.
399)
|
2.
செங்குவளை.
| "விளக்கிட்
டன்ன கடிகமழ் குவளை" |
(சீவக. 256)
|
3.
ஒரு பேரெண்.
| "நெய்தலுங்
குவளையும் ஆம்பலுஞ் சங்கமும்" |
(பரிபா.2:13)
|
குள்ளம் - குல்லை
(kh)
குளம்1
- கூல = சிறுகுளம்.
|