பக்கம் எண் :

128வடமொழி வரலாறு

குளம்2 - குல (g) = வெல்லம்

     குளம் = வெல்லவுருண்டை.

குளிகை - குலிகா (g) = உருண்டை, மாத்திரை.

     குளம் - குளிகை = உருண்டை மாத்திரை.

     குளியம் = உருண்டை, உருண்டை மாத்திரை.

குளிர் - குளீர = நண்டு.

     குள்ளுதல் = கிள்ளுதல், கிண்டுதல், கீறுதல். குள் - குளிர் =
கூரிய கவைக்காலாற் கடிக்கும் அல்லது கூரிய கால்களால் நிலத்தைக்
கீறும் நண்டு.

கூ - கு, கூ

கூ - கூவு

கூகை - கூக (gh)

கூடம் - கூட (-)

கூடு - கூடம் = பலர் கூடும் இடம், சாலை, பட்டறை.

கூடாரம் - குடரு (-)

கூந்தல் - குந்தல (nt)

     குத்து = கொத்து. குத்து - குந்து - கூந்து = மயிர்க்கொத்து.

"கூந்திளம் பிடி"
(சூளா. நாட்டு. 19)

     கூந்து - கூந்தல் = கொத்தான பெண்டிர் தலைமயிர், மயிற்றோகை,
குதிரைவால்(?), கூந்தற்பனை, கமுகம்பாளை, குதிரைவாலிக் கதிர்,
ஒ. நோ: கொத்து-கொந்து.

     ம. கூந்தல். க. கூதல்.

கூம்பு - கூப = பாய்மரம்.

கூலம் - குல

கூழ் - கூர

     குழை - கூழ் = குழைந்த வுணவு.

கூழை - கூல = படையின் பின்னணி.

     கூழை = 1. வால். "புன் கூழையங் குறுநரி" (கல்லா. 89:18)

     2. வால்போன்ற பின்னணி.