பக்கம் எண் :

மொழியதிகாரம்129

கேது - கேது

     செல் - செள் - செய் - சேய் - சே - சேது = சிகப்பு.

     சேதா = சிவந்த ஆ. சேதாம்பல் = செவ்வாம்பல்.

     சேது - கேது = செம்பாம்பு வடிவினதாகச் சொல்லப்படும்
     ஒன்பதாங் கோள்.

கைதை - கைதக

     கள் = முள். கள் - கய் - கை - (கைது) - கைதை = முள்ளுள்ள
     தாழை.

"கைதையம் படப்பை"
(அகம். 100 : 18)

     ம. கைதா. வடசொல் கேதக என்னும் வடிவுங் கொள்ளும்.

கொக்கு - கோக்க = ஓநாய்.

     கொக்கு = செந்நாய் (பிங்.).

கொங்கணம் - கோங்காண

     கொங்கு - கொங்கணம்.

கொஞ்சம் - கிஞ்சித்

     குஞ்சு=சிறியது, பறவைக் குஞ்சு. குஞ்சு - குஞ்சி = சிறியது,
    
பறவைக்குஞ்சு. குஞ்சிப்பெட்டி=சிறுபெட்டி. குஞ்சியப்பன்= சிற்றப்பன்.      குஞ்சு - குஞ்சன் = சிறியவன், குறளன்.

     குஞ்சு - கொஞ்சு - கொஞ்சம் - கிஞ்சம் = சிறிது.

     கிஞ்சம் - கிஞ்சித் (வ.).

கொத்தமல்லி - குஸ்தும்பரு

     கொத்துமல்லி - கொத்தமல்லி.

கொதி - க்வத் (th)

கொப்பரை - கர்ப்பர

     கொப்பரை - கப்பரை - கர்ப்பர (வ

கோ - கோ (g), கௌஸ் (g) - இ.வே.

     கோ=ஆ. கோவன் = 1. மாட்டிடையன், இடையன் (ஆயன்).

"கோவன்நிரை மீட்டனன்" (சீவக. 455)

     2. அரசன். "கோவனு மக்களும்" (சீவக. 1843)