|
குடிகள்
ஆடுகளும் அரசன் மேய்ப்பனும்போலக் கருதப்
பெற்றதினால், அரசன் கோவன் எனப் பெற்றான். அரசன் செங்கோல்
ஆயன் கைக்கோலுக் கொப்பாம்.
கோவன்-கோன்
= 1. இடையன். 2. அரசன்.
கோன்-கோனார்
= இடையர். கோன் - கோ = அரசன்.
கோவன்
என்பதைக் கோப என்று திரித்தும் பின்பு அதைக்
கோ+ப என்று பிரித்தும், கோவைப் பாதுகாப்பவன் என்று வடவர்
பொருள் கூறுவது பொருந்தாது. கோவன் என்பது ஆயன் (ஆ+அன்)
என்பதை யொத்ததே.
ஆங்கிலத்தில்
(தியூத்தானியத்தில்) கோ (OS), கூ (OE), கௌ (E)
என்று எடுப்பொலியின்றியே வழங்கி வருகின்றது. வேத ஆரியத்தில்தான்
go என்று எடுத்தும் gons என்று திரிந்தும் ஒலித்திருக்கின்றது.
கோசம் - கோச
= உருண்டை.
கோளம்
- கோசம் = முட்டை (பிங்.).
ள
- ச, போலி. ஒ.நோ : உளு - உசு, இளி - இசி.
கோட்டம் - கோஷ்ட
கோடுதல்
= வளைதல். கோடு - கோட்டம் = 1.வளைவு.
2.நிலாவைத் சூழ்ந்த வட்டக்கோடு. 3.மதிலாற் சூழப்பெற்ற கோயில்.
"கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்" (சிலப். 14: 10). 4.மதிலாற்
சூழப்பெற்ற சிறைச்சாலை
| "சிறைக்கோட்டம்
விருப்பொடும் புகுந்து" |
(மணிமே.
19: 43)
|
கோட்டி - கோஷ்டீ
(g)
குலவுதல்=கூடுதல்.
குள்-கள்-களம். குழம்புதல் = கலத்தல், திரளுதல்.
குல்-குள்-கொள்.
கொள்ளுதல் = 1. பொருந்துதல், கூடுதல்,
மனத்திற்குப் பொருந்துதல்.
"கொள்ளாத
கொள்ளா துலகு" (குறள். 470). 2.ஒத்தல். "வண்டினம்
யாழ்கொண்ட கொளை" (பரிபா. 11: 125).
கொள்-கோள்
= குலை. "செழுங்கோள் வாழை" (புறம்.168).
கொள்
- கொள்ளை = 1. மிகுதி.
"கொள்ளை
மதத்த நால்வாய்" (பாகவ. 1:5:14). 2. கூட்டம்.
|