பக்கம் எண் :

மொழியதிகாரம்131

     "கொள்ளை யிற்பலர் கூறலும்" (கந்தபு.விண்குடி. 14)

     கொள் - கொட்டி = கூட்டம் (அக. நி.).

     கொட்டி - கோட்டி = 1. ஒருவர் இன்னொருவரொடு கூடியிருக்கை.

     "தன்றுணைவி கோட்டியி னீங்கி" (சீவக. 2035).

     2. கூட்டம் (பிங்.).3. அறிஞர் அவை.

     "தோமறு கோட்டியும்" (மணிமே. 1: 43). 4. அவைப்பேச்சு.

     "வீரக் கோட்டி பேசுவார்" (கம்பரா. மாயாசனகப். 13).

     கோட்டிகொளல் - அவையிற் பேசுதல்.

     "நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள். 401).

     வடவர் கோஷ்டீ என்னும் தென்சொற்றிரிபைக் கோ என்னும்
ஆவின் பெயரொடு தொடர்புபடுத்தி, மாட்டுக்கொட்டில், விலங்குக்
கூட்டம், மக்கட் கூட்டம் என்று பொருத்திக்காட்டுவர். இதன்
பொருத்தமின்மையைப் பகுத்தறிவுள்ளார் கண்டுகொள்க.

கோட்டை - கோட்ட

     கோடுதல் = வளைதல். கோடு - கோட்டை = 1. நிலாவைச் சூழ்ந்த
     வட்டக்கோடு.

     "சந்திரனோர் கோட்டை கட்டி" (கொண்டல்விடு. 72). 2.வட்டமான
     நெற்கூடு.

     "உலவாக் கோட்டை" (திருவாலவா. 50:13). 3. நெற்குதிர். 4. ஒரு
     முகத்தலளவை.

     இது முதலில் ஒரு நெற்குதிரளவாயிருந்து, இன்று 21 மரக் கால்
கொண்ட அளவைக் குறிக்கின்றது.

     5. அரண்மனையை அல்லது நகரைச் சூழ்ந்த மதிலரண். ம., க., தெ.
     கோட்ட.

     மா.வி. அகரமுதலி கோட்ட என்னுஞ் சொற்கு விளைவு, குடிசை,
மதிலரண் என்று பொருள்கூறி, குட் (வளை) என்பதை மூலமாகக் காட்டும்.
கோடு என்னுஞ் சொல் வடமொழியி லின்மையால் இங்ஙனங் காட்ட
நேர்ந்தது. குட் என்பது குட என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னமே
கூறப்பட்டது.

கோடரி - குட்டார (h)

     கோடு = மரக்கிளை. அரிதல் = அறுத்தல், வெட்டுதல். கோடரி =
மரக்கிளையை வெட்டும் அல்லது பிளக்குங் கருவி.

     கோடரி - கோடாரி - கோடாலி.

     க கோடாலி, தெ. கொட்டலி (g), . கோடாலி.