பக்கம் எண் :

மொழியதிகாரம்135

     சக்கு - சங்கு = உள் வளைந்துள்ள நந்துக்கூடு, வலம்புரி, இடம்புரி.
     புரிதல் = வளைதல்.

     ஒ.நோ : கோடு = சங்கு. சுரிமுகம் = சங்கு. வளை = சங்கு.
     வாரணம் = சங்கு.

     சங்கு-சங்கம்=1. சங்கு. "அடுதிரைச் சங்க மார்ப்ப" (சீவக.701).

     2. கைவளை. "சங்கங் கழல" (இறை. 39, உரை).

     'சக்கரம்' முதல் 'சங்கு' வரை பல சொற்கள் வளைவுக்
கருத்தடிப்படையில் ஒரே தொடர்புடையனவாதலின், ஒருங்கு கூறப்பட்டன.

     சக்ர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளரால்
குறிக்கப்பட்டுள்ள மூலம் க்ரு(செய்) என்பதே. மா. வி. அகரமுதலி சர்
(car) என்னும் சொல்லை வினாக்குறியுடன் குறித்துள்ளது. சர் = இயங்கு.
இவ் விரண்டுள், முன்னதின் பொருந்தாமையையும் பின்னதின்
வன்புணர்ப்புத் தன்மையையும், அறிஞர் கண்டு கொள்க.

சகடம் - சகட (s, )

     மா. வி. அ. "of doubtful derivation" என்று குறித்திருத்தல் காண்க.

சகடி - சகடீ (s, )

சகடிகை - சகடிகா (s, )

சகோரம் - சகோர (c)

     வடவர் காட்டும் மூலம் சக் (c) என்பதாகும். இது குறிக்கும்
பொருள்கள் பொந்திகை (திருப்தி), எதிர்ப்பு, ஒளிர்வு என்பனவே.

சங்கம் - சங்க (s,kh) - அ.வே.

     வடமொழியில் இச் சொற்கு மூலமுமில்லை; சங்கு என்னும்
மூலவடிவு மில்லை.

சச்சரி - ஜர்ஜரா (jh)

     இது தென்னாட்டுப் பறைகளுள் ஒன்று.

"கொக்கரையின் சச்சரியின் பாணி யானை"
(தேவா. 722: 1)

     இப் பெயர் ஒலிக்குறிப் படிப்படையில் தோன்றியது.

சடம் - ஜட

     வடவர் குளிர்மை என்பதை மூலக்கருத்தாக வைத்து, குளிர்,
சில்லெனல், விறைப்பு, மரப்பு, அசைவின்மை, உணர்வின்மை,
உணர்ச்சியின்மை, மயக்கம், திமிர், மடமை, மந்தம், உயிரின்மை,