பக்கம் எண் :

134வடமொழி வரலாறு

     சக்கரம், சக்கரப்படை, வட்டக்காசு, சக்கரப்புள், மாநிலம், செக்கு.

"சக்கரப் பாடித் தெருவு"
(பெரியபு. கலியனா. 5)

     Gk. kuklos, E. cycle = சக்கரம்.

     சருக்கரம் - சருக்கரை - சர்க்கரை - சக்கரை = வட்டமாக வார்க்கப்
     பெற்ற வெல்லக்கட்டி.

     ஒ.நோ : வட்டு - வட்டமான கருப்புக்கட்டி.

     சருக்கரம்-(சருக்காரம்) - சக்காரம் (மூ.அ.) = இனிய தேமா. இன்றும்
சக்கரைக்குட்டி என்று ஒரு மாம்பழப் பெயர் வழங்குதல் காண்க.

     சக்காரம் - அக்காரம் = சருக்கரை.

"அக்கார மன்னார்"
(நாலடி. 374).

     அக்காரடலை, அக்காரவடிசில் என்பன சருக்கரைப் பொங்கல்
வகைகள்.

     பதநீரை (தெளிவை) அக்காரநீர் என்பது நாஞ்சில்நாட்டு வழக்கு.
அக்காரம் என்று மாங்கனிக்கும் பெயர். அக்காரக்கனி நச்சுமனார் என்னும்
புலவர்பெயர் அக் கனியால் வந்ததுபோலும்!

     சக்கரம் - (சக்கு) - செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான உரல்.

     ஒ.நோ : பரு - பெரு, சத்தான் - செத்தான்.

     சக்கு - சக்கடம் - சக்கடா = கட்டை வண்டி.

     தெ. செக்கடா பண்டி.

     சக்கடம் - சகடம் = சக்கரம், வண்டி, தேர், வட்டில், முரசு.

     சகடம் - சகடி = வண்டி. சகடிகை = கைவண்டி.

     சகடு = வண்டி. சகடு - சாகாடு = வண்டி.

 "பீலிபெய் சாகாடும்"
(குறள் .476)

     சகடு - சாடு = வண்டி.

"குறுஞ்சாட் டுருளை"
(பெரும்பாண். 188)

     சாடு - சாடுகம் = வண்டி.

     சகடு - சகடை = வண்டி, முரசு, அமங்கலச் சிறுபறை.

     சகடை - சகண்டை = முரசு, பறைப்பொது.

     சகடம் - சகோடம் = சக்கரப்புள், அதன் வடிவான யாழ்.

     சகோடம் = சகோரம் = சக்கரப்புள்.